சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இங்கு நாளை (ஜுன் 28) பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதனையடுத்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்கள், மற்றவர்கள் கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என பல்கலைக் கழக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த நிலையில், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மாணவ- மாணவிகளுக்கு பல்கலைக் கழகம் சார்பில் அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில், பெரியார் பல்கலைக் கழக 21-வது பட்டமளிப்பு விழா நாளை (ஜுன் 28) தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற உள்ளது. அவ்வாறு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாது உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கருப்பு கொடி காட்ட உள்ளதால் அதன் எதிரொலியாக பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது அந்த சுற்றறிக்கையை அரசு திரும்பப் பெற்றுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“