/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-05-13T101817.799.jpg)
Salem police
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் ஸ்ரீ அபினவ். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் மாற்றப்பட்டார். இதையடுத்து அந்த இடத்தைப் பிடிப்பதற்கு காவல் உயர் அதிகாரிகளிடையே போட்டி நிலவியது. பல்வேறு அதிகாரிகள் பெயர் கூறப்பட்டு வந்து நிலையில் சேலம் மாவட்ட எஸ்.பியாக சிவகுமார் பணியமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் இவர் பொறுப்பேற்ற நாள் முதல் இவர் மீது பல்வேறு புகார்கள் சென்னையில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தற்போது பெண் போலீஸ் அதிகாரி பற்றி வாட்ஸ் அப்-ல் ஸ்டேட்டஸ் பகிர்ந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சேலம் எஸ்.பி சிவகுமார் என்ற பெயரில் வெளியான வாட்ஸ் அப்-ல் ஸ்டேட்டஸில், பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை. சேலம் மாநகரத்தில் திருமதி. லாவண்யா என்பவர் காவல் துணை ஆணையராக இருக்கிறார். இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி பெற வேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/101779691.png)
ஓய்வு பெற்ற டி.ஜி.பி இடம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியைப் பெற முயற்சி செய்கிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சேலம் மாநகர காவல் துணை ஆணையராக இருந்து வரும் லாவண்யா பெயரும் எஸ்.பி பதவிக்கு கூறப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரைப் பற்றிய இந்த ஸ்டேட்டஸ் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்.பி சிவகுமாரிடம் பேசியபோது, தனது நண்பர் யாரோ தனக்கு அனுப்பியதாகவும் அதனை தனது மனைவிக்கு அனுப்பும் போது தவறுதலாக ஸ்டேட்டஸில் வந்துள்ளது எனவும். உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, சேலம் மாநகர துணை ஆணையர் லாவண்யாவிடம் பேசியபோது, " எனக்கு எந்த பதவியின் மீதும் ஆசை இல்லை. இருக்கும் பணியை திறம்பட செய்து வருகிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரி இதுபோன்று வைத்துள்ளது எதனால் என்று தெரியவில்லை. இதனை தனது மேலதிகாரிக்கு தெரிவித்துள்ளேன்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.