அமெரிக்கா செல்ல விசா எடுப்பதற்காக பெங்களூரு வந்த தமிழகத்தைச் சேர்ந்த 29 வயது மென்பொருள் பொறியாளர் செவ்வாய்க்கிழமை அதிகாலை யஷ்வந்த்பூர் மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்த விபத்தில் உயிரிழந்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Tamil Nadu techie who came to Bengaluru to collect US visa dies after car falls from flyover
இந்த விபத்தில் இறந்தவர் தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த எஸ். ஷபரீஷ் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அதிகாலை 3.45 மணியளவில் ஷபரீஷ் மற்றும் அவரது நண்பர்கள் மிதுன் சக்ரவர்த்தி (29), அனுஸ்ரீ (23), சங்கர் ராம் (29) ஆகியோர் துமகுரு நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. மிதுன் சக்கரவர்த்தி காரை ஓட்டிச் சென்றுள்ளார், மேம்பாலத்தில் வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது என்று போலீசார் தெரிவித்தனர்.
கார் சாலையில் செண்டர் மீடியனைத் தாண்டி, கச்சரகனஹள்ளியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மஞ்சுநாத் (38) ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி, பின்னர் பக்கவாட்டுச் சுவரில் மோதி மேம்பாலத்தில் இருந்து 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் சக்கரவர்த்தியின் அருகில் அமர்ந்திருந்த ஷபரீஷ் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஷபரீஷ் மற்றும் மிதுன் ஆகியோர் திங்கள்கிழமை காலை சேலத்தில் இருந்து பெங்களூரு வந்தனர். இன்னும் சில வாரங்களில் அமெரிக்கா செல்லவிருந்த ஷபரீஷ், தனது விசாவை பெற்றுக்கொண்டு, மல்லேஸ்வரத்தில் தங்கியிருக்கும் உறவினர்களான அனுஸ்ரீ மற்றும் ஷங்கர் ராம் ஆகியோருடன் தனது பயணத்திற்காக ஷாப்பிங் செய்துகொண்டிருந்தார். செவ்வாய்கிழமை மாலை யஷ்வந்த்பூரில் உள்ள ஒரு மாலுக்குச் சென்ற இந்த குழுவினர், ராமின் பேயிங் கெஸ்ட் தங்குமிடத்திற்குச் செல்வதற்கு முன், தங்கள் ஷாப்பிங் பேக்குகளை இறக்கிவிடுவதற்காக அருகிலுள்ள பப்பிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
உணவு தேடி வாகனத்தில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த்ந விபத்து நடந்த போது கார் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சென்றதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காருக்குள் காலி போத்தல் ஒன்று காணப்பட்டதாகவும், அதில் இருந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும் போலிஸார் தெரிவித்தனர்.
“நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு எங்கள் பயணத்திற்காக காத்திருந்தோம், அப்போது ஒரு பெரிய சத்தம் கேட்டது. போய் பார்த்தால், மேம்பாலத்தில் இருந்து கார் ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அதிர்ஷ்டவசமாக, அது யாருமில்லாத காலியான பகுதியில் விழுந்தது. நாங்கள் உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தோம், போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்” என்று அப்பகுதியில் இருந்த ஒரு ஆட்டோரிக்ஷா டிரைவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.