தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தம்மம்பட்டி! மரச் சிற்பங்களுக்கு சிவப்பு கம்பளம்

சேலம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த கைவினைஞர்கள் கலை நுட்பத்துடன் உருவாக்கும் மரவேலைப்பாடுகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளது. கடவுள் சிற்பங்கள், புராண கதைகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலான மரச் சிற்பங்களுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரசித்து பெற்றவையாக உள்ளன.  தம்மம்பட்டியில் உள்ள ஒவ்வொரு சிற்பக் கலைஞரும்,…

By: Updated: July 1, 2020, 01:59:32 PM

சேலம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த கைவினைஞர்கள் கலை நுட்பத்துடன் உருவாக்கும் மரவேலைப்பாடுகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளது.

கடவுள் சிற்பங்கள், புராண கதைகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலான மரச் சிற்பங்களுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரசித்து பெற்றவையாக உள்ளன.


தம்மம்பட்டியில் உள்ள ஒவ்வொரு சிற்பக் கலைஞரும், தனித்தன்மை கொண்டவர்கள் என அறியப்படுகிறது. சேலத்தில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக  இந்த மர வேலைப்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடவுள் சிற்பங்களைத் தாண்டி, அரசியல் தலைவர்களின் சிலை என பல்வேறு வடிவங்களிலான சிற்பங்களை வாடிக்கையாளர்களின் தேவைகேற்ப வடிவமைத்து தருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை கூட எடுக்க முடியும்.

முன்னதாக, கோவில்பட்டி நிலக்கடலையைக் கொண்டு,  உருவாக்கப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Salem thammampatti wood carvings next gi product news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X