கோவிட் -19 க்கு தடுப்பு மருந்து தங்களிடம் இருப்பதாகக் கூறி பொதுமக்களை தவறாக வழிநடத்தியதற்காக, இரண்டு ஹோமியோபதி மருத்துவர்கள் மீது தண்டனை பாய இருக்கிறது.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இரண்டு ஹோமியோபதி மருத்துவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் இருப்பாதாகக் கூறி பொதுமக்களை தவறாக வழிநடத்தியது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தீர்வு என்பது போன்ற துண்டு பிரசுரங்களை அங்கிருக்கும் உழவர் சந்தையில் மூன்றாவது நபர் மூலம் விநியோகித்து இருக்கிறனர். அந்து துண்டு பிரசுரத்தில் ஹோமியோபதி மருத்துவர்களின் முகவரி, புகைப்படங்கள் போன்றவைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் டெஸ்ட் : அரசு வழிகாட்டுதல்கள் என்ன சொல்கின்றன?
இந்த பித்தலாட்டத்தை கண்டறிந்த மக்கள், உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவலை கொண்டு சேர்த்துள்ளனர். இருப்பினும், அதிகாரிகள் வருவதற்கு முன்பு, சுதாரித்தமருத்துவர்கள் கிளினிக்கை காலி செய்து விட்டு தலைமறைவாகினர். அந்த தொலைபேசி இணைப்பும் தற்போது செயல்படவில்லை என்று அதிகாரிகள் குழு தெரிவிக்கின்றது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றை வைத்து மக்களை தவறாக வழிநடத்தியதற்காக அந்த இரண்டு ஹோமியோபதி மருத்துவர்கள் மீது அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.