தருமபுரி மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு முடி வெட்ட மறுத்த சலூன் உரிமையாளர் மற்றும் அவரது மகனை போலீசார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர். அவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து எஸ்.ஐ எஸ்.சக்திவேல் கூறுகையில், தருமபுரி மாவட்டம் கீரைப்பட்டி பகுதியில் சின்னையன் ( 56) மற்றும் அவரது மகன் யோகேஸ்வரன் (26) ஆகியோர் முடி திருத்தும் கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த மே 9-ம் தேதி, கேளப்பாறை தலித் காலனியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் சலூனுக்குச் சென்று முடி வெட்டக் கேட்டுள்ளார். அப்போது இளைஞரின் சாதியைக் குறிப்பிட்டு பேசி யோகேஸ்வரன் முடி வெட்ட மறுத்துள்ளார்.
மேலும் அந்தக் கடையில் பட்டியலின மக்களுக்கு இதே நிலை தான் இருந்து வந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் சின்னையன் மற்றும் யோகேஸ்வரன் பேசிய வீடியோ பதிவை காண்பித்து சனிக்கிழமை மாலை ஹரூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மறுநாள் காலை சின்னையன், யோகேஸ்வரன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போலீசார் அவர்களை கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“