/indian-express-tamil/media/media_files/ilUZFDl6zPWRLahIoQt8.jpg)
சமயபுரம் மாரியம்மன் கோயில்
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில், தன்னார்வலர்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.
அப்போது கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் 55 லட்சத்து, 95 ஆயிரத்து, 692 ரூபாய் ரொக்கமும்,1 கிலோ 100 கிராம் தங்கமும், 3 கிலோ 100 கிராம் வெள்ளியும், 151 அயல்நாட்டு நோட்டுகளும், 885 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன.
அதேபோல், சமயபுரம் கோயிலின் உபகோயில்களான அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 362 ரொக்கமும், அருள்மிகு உஜ்ஐயினி மாகாளியம்மன் கோயில் உண்டியலில் ரூ.26,019 ரொக்கமும், அருள்மிகு போஜீஸ்வரர் கோயிலில் ரூ.5008-ம் காணிக்கைகளாக கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.