/indian-express-tamil/media/media_files/2025/02/20/ygEEhIMgmqxfSADjecWi.jpg)
ஊழியர்கள் பணியிடை நீக்கத்தை கண்டித்து, ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளர்கள் 16வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆலையில் இடையூறுகள் இருப்பதாக தமிழக அரசின் லையீட்டைக் கோருவதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி அதிரடியாக விளையாடினர். இதில் 7 பவுண்டரிகளை விரட்டிய கேப்டன் ரோகித் 41 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த விராட் கோலி 22 ரன்னிலும், அதன் பிறகு வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 15 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
தற்போது களத்தில் கில் - அக்சர் படேல் ஜோடி ஆடி வருகிறார்கள். 29 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு 91 ரன்கள் தேவை.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
தொடர்ந்து சாம்சங் இந்தியா நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் நிர்வாகி குணசேகரனை கடந்த ஜனவரி 4 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து அடுத்தநாள் மோகன்ராஜ், சிவநேசன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 16-வது நாளாக சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், சாம்சங் தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாம்சங் விளக்கம்
இந்நிலையில், ஊழியர்கள் பணியிடை நீக்கத்தை கண்டித்து, ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளர்கள் 16வது நாளாக போராட்டம் நடத்தி வரும் சூழலில், ஆலையில் இடையூறுகள் இருப்பதாக தமிழக அரசின் தலையீட்டைக் கோருவதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சாம்சங் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், 'எங்கள் கொள்கைகளை மீறுபவர்கள் உரிய செயல்முறைக்கு பிறகு ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். நிறுவனத்தில் ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் பராமரிக்க, மாநில அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி பிரிவில் நடந்த போராட்டம் வருவாய், காவல்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டு, ஆலை வளாகத்தில் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.