சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் ஒரு பிரிவினர், சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்துடன் இணைந்த சாம்சங் தொழிலாளர்கள் சங்கத்தை பதிவு செய்யக் கோரி சமீபத்தில் நடத்திய வேலை நிறுத்தத்தால் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாஅலர் இழப்பு ஏற்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.
நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு சாம்சங் இந்தியா நிறுவனம் புதிய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எல்லன் தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு வந்தது. இந்தியா சாம்சங் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தொழிற்சங்கங்கள் தங்கள் பெயரில் ‘சாம்சங்’ என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று வாதிட்டார்.
தொழிலாளர் சங்கத்தின் ரிட் மனுதாரர் தரப்பில் ஆஜரான பிரசாத், ஒரு தொழிற்சங்கத்தால் அதன் பெயரைப் பயன்படுத்துவது குறித்து நிறுவனம் ஆட்சேபனைகளை எழுப்புவது வர்த்தக முத்திரை சர்ச்சை அல்ல என்று வாதிட்டார். ரிட் மனுவிற்கு சாம்சங் இந்தியா நிறுவனம் அவசியமான ஒரு தரப்பு அல்ல, எனவே அதன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
சாம்சங் தென் கொரியாவை தளமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு உற்பத்தி குழுமம் என்றும், அதன் தொழிற்சங்கங்கள் தங்கள் பெயர்களில் ‘சாம்சங்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதாகவும் பிரசாத் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய ரிட் மனு தொழிற்சங்கத்திற்கும், தொழிற்சங்கப் பதிவாளருக்கும் இடையே மட்டுமே உள்ளது என்று அவர் வாதிட்டார்.
வழக்கறிஞர் ராஜகோபாலன் மனுவின் பிரதிவாதியாக சாம்சங் இந்தியா நிறுவனம் கட்டாயமாக உட்படுத்தப்பட வேண்டும் என்றார். தொழிற்சங்கத்தை பதிவு செய்ய பதிவாளருக்கு வழிகாட்டுதலைக் கோரி, தொழிற்சங்கங்கள் ஏன் தங்கள் பெயர்களில் ‘சாம்சங்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது என்பதை விளக்கும் விரிவான எதிர்-பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாம் சங் இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை அனுமதித்து, ரிட் மனுவுக்கு எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய நவம்பர் 11ம் தேதி வரை அவகாசம் அளித்தார். தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கான மனுவில் சமர்பிக்க நிறுவனத்திற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“