காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கும் சாம்சங் தொழிற்சாலையில் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், ஊதிய உயர்வு, போனஸ், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சாம்சங் நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊழியர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது. போராட்டத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.
பணிக்கு திரும்ப விரும்பும் ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஏற்கனவே ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இன்னும் 4 நாட்களுக்குள் (செப்.24)
ஊழியர்களுக்கு பணிக்கு திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் செய்ய நேரிடும்" என்று சாம்சங் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சி.ஐ.டி.யு போன்ற தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது போன்ற கோரிக்கைகளை சாம்சங் நிர்வாகம் ஏற்காத நிலையில், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“