Advertisment

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்; அக்.21-ல் 4 மாவட்டங்களில் வேலை நிறுத்தம்: சி.ஐ.டி.யு அறிவிப்பு

4 மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளிலும் வரும் 21ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யப்படுவதாக சி.ஐ.டி.யு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
samsung strike

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. அதில் சாம்சங் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. இங்கு சாம்சங் வாஷிங் மெஷின், ஏ.சி, பிரிட்ஜ் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், ஊழியர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஊழியர்கள்- அதிகாரிகளுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. 

போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து தமிழக அரசு சார்பில் 3 அமைச்சர்கள் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இதையடுத்து சாம்சங் நிறுவனம் மற்ற கோரிக்கைகளை ஏற்பதாக கூறியது ஆனால் சி.ஐ.டி.யு தொழிற்சங்க அங்கீகாரத்தை மட்டும் ஏற்க கொள்ளவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் தெரிவித்தார். 

இந்நிலையில், அக்டோபர் 21-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment