தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்” என்று கூறினார்.
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, தேசிய அளவில் பெரும் சர்ச்சையானது. பா.ஜ.க மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சனாதன ஒழிப்பு மாநாட்டில், இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். உதயநிதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு கலந்துகொண்டதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த நிகழ்ச்சி நடத்தியதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து கண்டறிய சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஜெகநாதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம். திரிவேதி அடங்கிய அமர்வு அமைச்சர் உதயநிதி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு செப்டம்பர் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம். திரிவேதி அடங்கிய அமர்வு, சனாதனத்துக்கு எதிராக கூறப்பட்ட கடுமையான மற்றும் இழிவுபடுத்தும் கருத்துக்களுக்கு தண்டனை விதிக்கக் கோரி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த புதிய மனுவை விசாரித்தது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய பொதுநல வழக்குகள், “பொதுநல வழக்குகள்” என்ற தன்மையில் இருப்பதாக தமிழக அரசு புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம். திரிவேதி அடங்கிய அமர்வு, சனாதன தர்மத்திற்கு எதிராக கூறப்பட்ட கடுமையான மற்றும் இழிவுபடுத்தும் கருத்துக்களுக்கு தண்டனை விதிக்கக் கோரி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த புதிய மனுவை விசாரித்தது.
முன்னதாக, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, “நீதிபதி அவர்களே, இவையெல்லாம் ‘பொது நல வழக்குகள்’ என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகு அவர்கள் செய்யும் விளம்பரத்தை நீங்கள் நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது” என்று சுட்டிக் காட்டினார்.
நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஏற்கனவே 40 மனுக்கள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, மேலும் எந்த மனுவையும் விசாரிக்கத் தேவையில்லை என்றும் வலியுறுத்தினார். “நாங்கள் நோட்டீஸ் அனுப்ப மாட்டோம், ஆனால், அதை மற்றவற்றுடன் இணைக்க் குறியிடுவோம்” என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“