Advertisment

'பதவி நீக்கம் செய்ய அவசியம் இல்லை' - சனாதன சர்ச்சை வழக்கை முடித்துவைத்த ஐகோர்ட்

சனாதனம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் எம்.பி ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி அனிதா சுமந்த் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
Sanathana Dharma remarks Udhayanidhi Stalin Sekar Babu A Raja madras high court verdict announce Tamil News

சனாதனம் தொடர்பான அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, எம்.பி ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Udhayanidhi Stalin | Minister PK Sekar Babu | A Raja | Madras High Court: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்.2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

Advertisment

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி சனாதனத்தை சனாதனத்தை எதிர்க்கக் கூடாது, ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் அவர் பேசியிருந்தார். அவரின் இந்தக் கருத்துகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி மற்றும் எம்.பி ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ - வாரண்டோ (Quo warranto) வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 23 அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். 

இதற்கிடையில், தன் மீதுள்ள வழக்குகளுக்கு தான் பதிலளிக்க தயார் என்றும், அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி மனுத்தாக்கல் செய்தார். அந்த விசாரணையின்போது, "உதயநிதி சாதாரண குடிமகன் அல்ல, அமைச்சராக இருப்பவர் தமது கருத்து எத்தகைய எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்" என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

மேலும், உதயநிதி தமது கருத்து சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிட்டு, தற்போது சட்டபிரிவு 32-ன் கீழ் பாதுகாப்பு கோருவதா? என்றும் கேள்வி எழுப்பினார். அந்த வழக்கின் விசாரணையை மார்ச் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

தீர்ப்பு 

இந்த நிலையில், சனாதனம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் எம்.பி ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி அனிதா சுமந்த் இன்று தீர்ப்பு அளித்தார். 

"அமைச்சர்களுக்கு எதிரான கோ-வாரண்டோ வழக்கு விசாரணைக்கு உகந்தது தான். அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய அவசியம் இல்லை" என்று கூறிய நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிரான கோ-வாரண்டோ வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக தெரிவித்தார். 

மேலும், இந்த வழக்கில் மனுதாரர் கேட்கும் கோரிக்கையின் அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும், அதில் எதிலும் தண்டனை அறிவிக்கப்படவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். 

 இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. எம்.பி. வில்சன், மனுதாரரின் கோ-வாரண்டோ வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல என்று நீதிபதி தெரிவித்தாகவும், இது தங்களது தரப்புக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Udhayanidhi Stalin Madras High Court A Raja Minister PK Sekar Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment