Advertisment

சனாதன தர்மம் தொடர்பான வழக்கு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமீன்

சனாதன தர்மம் குறித்து சர்ச்சையாக பேசிதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கி கர்நாடகா மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சனாதன தர்மம் குறித்து சர்ச்சையாக பேசிதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கி கர்நாடகா மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் த.மு.எ.க.ச நடத்திய சனாதன  ஒழிப்பு  மாநாட்டில்  பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார்.

இதற்கு பா.ஜ.க தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் மீது பீகார், உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் உதயநிதி கருத்து தன்னையும், இந்து மதத்தையும் சேர்ந்தவர்களையும் இழிவுபடுத்துவதாக பெங்ளூருவைச் சேர்ந்த பரமேஸ்வரா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பெருங்களூரு மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் உதயநிதி இன்று ஆஜரானார். உதயநிதி தரப்பில், சனாதனம் தொடர்பான பல மாநிலங்களில் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க  வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக புகார் தாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. இதனால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 8ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிகள்,  1 லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment