கோவை நகரின் மத்திய பகுதியில் சிறைச் சாலை அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் சிறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு அதே வளாகத்தில் அமைந்து உள்ளது.
Advertisment
இந்நிலையில் கோவை மத்திய சிறைச் சாலையின் ஜெய்லர் சிவராஜன் போலீசார் உடன் கண்காணிப்பு பணியில் சிறை வளாகத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த சந்தன மரம் ஒன்று அறுத்து எடுத்து செல்லப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisment
Advertisement
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil