தூத்துக்குடி சந்தியா கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கணவர் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டிய ஆற்றுப்படுகியில் சந்தியாவின் தலை தேடும் பணி தீவிரம்.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் எஸ்ஆர் பாலகிருஷ்ணன் மனைவி சந்தியா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். பாலகிருஷ்ணனுக்கு சந்தியாவின் நடந்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, சந்தியாவை கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார்.
சந்தியா கொலை : தலையை தேடும் போலீஸ்
பெருங்குடி குப்பை கிடங்கில் கிடைத்த கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி பால கிருஷ்ணனனை கைது செய்தனர். கைது செய்த பிறகு, முதலில் தாம் தான் கொலை செய்ததாகவும், உடல் பாகங்களை எங்கே வீசினார், எப்படி கொலை செய்தார் என்றும் கூறினார். ஆனால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பிறகு அப்படியே அந்தர் பல்டி அடித்திருக்கிறார். நான் சிறைக்கு செல்ல தயார் ஆனால் கொலையை நான் செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவு அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் கை காண்பித்த அடையாற்றில் இடங்களில் தேடியபோது இடுப்பு கீழ் வெட்டப்பட்ட பாகம் கிடைத்துள்ளது. இருப்பினும், ஆற்றில் தண்ணீரின் போக்கு அதிகமாக உள்ளதால், தலை மற்றும் இடது கை இருக்கும் மூட்டையை தேடுவதில் கடினம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் தலை கிடைத்தால் மட்டுமே சென்னை போலீசாருக்கு இந்த வழக்கு முழு முடிவை தரும் என்பதால், தலையை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.