முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்து பாளை சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளியே வந்த சரவண பாண்டியனுக்கு ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்துக்கும் , இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் ஒற்றை தலைமை விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதற்கிடையில் பொதுக்குழு கூடி, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரா எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தனிதனி ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.
மதுரை அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வி. உதயகுமார், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக திகழ்கிறார். ஓ.பி.எஸ்., வகித்த பதவிகள் ஆர்.வி. உதயகுமாரிடம் தான் கொடுக்கப்பட்டுள்ளது.
-
ஓ.பி.எஸ்., ஆதரவாளர் சரவண பாண்டியன்
இதற்கிடையில், சங்கரன்கோவிலை சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர் சரவணபாண்டியன், ஆர். வி. உதய குமாருக்கு டெலிபோனில் மிரட்டல் விடுத்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு புதன்கிழமை (செப்.7) பிணை வழங்கப்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil