/indian-express-tamil/media/media_files/2025/03/29/Ru5HvtwgrrWdbAxeAKEu.jpg)
சனிப் பெயர்ச்சி எப்போது?
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இன்று சனிப்பெயர்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தை நம்புபவர்கள், இந்த சனிப் பெயர்ச்சிக்கான பரிகாரங்கள், பூஜைகளைச் செய்யலாம் என்ற விளம்பரங்களும் தென்படுகின்றன. ஊடகங்களில் ஜோதிடர்களும் இதற்கான பலன்களைச் சொல்லிவருகின்றனர். ஆனால், சனீஸ்வரனுக்கு மிக முக்கியமான கோயிலாகக் கருதப்படும் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேவஸ்தானம், இன்று சனிப்பெயர்ச்சி இல்லை எனத் தெரிவித்துள்ளது. இது சனிப்பெயர்ச்சியை நம்பக்கூடிய பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வானியல் ரீதியாக சூரியக் குடும்பத்தில் ஆறாவதாக உள்ள கிரகம் சனி. இந்த கிரகம் சூரியனைச் சுற்றிவர 29.45 ஆண்டுகளாகின்றன. அதாவது சுமார் 30 ஆண்டுகள். ஜோதிடத்தை நம்புபவர்களைப் பொருத்தவரை, மொத்தம் 12 ராசிகள் உள்ளதாகவும் மனிதர்கள் ஒவ்வொருவரும் இந்த 12 ராசிகளில் ஏதாவது ஒன்றில் பிறந்ததாகவும் கருதப்படுகின்றனர்.
வாக்கியப் பஞ்சாங்கம் முறைப்படி சனிப்பெயர்ச்சி எப்போது?
இப்படி கிரகங்கள் ஒருவரது ராசிக்குள் வருவதையும் விலகுவதையும் கணிக்க பஞ்சாங்கம் எனப்படும் வானியல் சார்ந்த கால அட்டவணைகள் (almanac) பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இந்தியாவில் இரு விதமான கணிப்புகளை அடிப்படையாக கொண்ட பஞ்சாங்கங்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று, வாக்கியப் பஞ்சாங்கம், மற்றொன்று திருக்கணிதப் பஞ்சாங்கம்.
இதில் வாக்கியப்பஞ்சாங்கம் பல 100 ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தப் பஞ்சாங்கத்தில் வானியல் ரீதியாக உள்ள சில பிழைகளைத் திருத்தி, 19ஆம் நூற்றாண்டில் திருக்கணித பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. இப்போது தமிழ்நாட்டின் கோவில்களிலும் மடங்களிலும் வாக்கியப் பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் பெரும்பாலான ஜோதிடர்களும் திருக்கணித பஞ்சாங்கத்தையே பின்பற்றுகின்றனர். இந்தத் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி சனி, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறது.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் அறிவிப்பு
புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலின் அதிகாரிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், "பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி (Saturn's Transit) தொடர்பாக பல்வேறு செய்திகள், கட்டுரைகள் வெளியாகிவருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29ஆம் தேதி அன்று சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன.
இதுதொடர்பாக திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் - சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் வாக்கியப் பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி, 2026-ம் ஆண்டிலே சனிப்பெயர்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கிறோம். ஆகையினால், 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு (Transit Rituals) நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்" என இந்த அறிக்கை கூறியது. மார்ச் 24-ம் தேதி வெளியான இந்த அறிக்கை, சனிப் பெயர்ச்சியை நம்பக் கூடிய பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஜோதிடர்கள் கூறுவது என்ன?
ஆனால், பிரபல ஜோதிடர்கள் மார்ச் 29-ம் தேதிதான் சனிப்பெயர்ச்சி நிகழ்வதாகச் சொல்கின்றனர். "வாக்கியப் பஞ்சாங்கத்தில் உள்ள காலப் பிழைகளைத் திருத்தியதுதான் திருக்கணிதப் பஞ்சாங்கம். ஆனால் தமிழகப் பகுதிகளில் உள்ள கோவில்கள் மட்டும் இன்னமும் வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பின்பற்றுகின்றனர். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 29ம் தேதிதான் சனிப்பெயர்ச்சி நடக்கிறது. தற்போதைய சனிப்பெயர்ச்சியின்படி, உலகம் யுத்தத்தை நோக்கிச் செல்லும், பேரழிவுகள் நிகழும். அதற்கான எல்லா அறிகுறிகளும் தற்போது தெரிய ஆரம்பித்துவிட்டன. ஆகவே திருக்கணிதப் பஞ்சாங்கம் சொல்வதுதான் சரி" என்கிறார் பிரபல ஜோதிடரான ஷெல்வி.
அறிவியல் உண்மை என்ன?
திருக்கணிதப் பஞ்சாங்கம் 2025ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி சனிப் பெயர்ச்சி நடப்பதாகச் சொல்கிறது. வாக்கியப் பஞ்சாங்கம் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனிப் பெயர்ச்சி நடப்பதாகச் சொல்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.