கிருமி நாசினி, முகக் கவசம் அதிக விலைக்கு விற்பனை – அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னையில், முக கவசங்கள், கிருமி நாசினிகள் கிடைக்காத நிலை உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனளிக்காது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

sanitizer, face mask price issue case corona virus

Corona Latest Updates: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவைப்படும் கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க எடுத்த முடிவு என்ன? கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போதுமான அளவு கிருமி நாசினி மற்றும் முககவசம் இருப்பை உறுதி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? மார்ச் 23 விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் கொரோனா அச்சமாக 2984 பேர் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், முககவசங்கள், கிருமி நாசினி திரவங்களை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், அவை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளது.

‘மார்ச் 31 வரை கோயில், மசூதி, சர்ச்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை’ – முதல்வர் அறிக்கையின் முழு விவரம்

இதன் அடிப்படையில் பிற மாநில அரசுகள் உத்தரவுகளை பிறப்பித்த போதும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள முககவசம், கிருமி நாசினிகளை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வது ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில், முக கவசங்கள், கிருமி நாசினிகள் கிடைக்காத நிலை உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனளிக்காது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று தமிழக அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுகாதார துறை செயலாளரிம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் 222 பேரின் 166 பேருக்கு கொரோனா இல்லை எனவும், 2 பேருக்கு அறிகுறி இருப்பதாகவும், 54 பேரின் மாதிரிகள் சோதனையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 19.30 லட்சம் முக கவசங்கள் இருப்பில் உள்ளதாகவும், பள்ளிகள், கல்லுரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சந்தேகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 044-29510500/400, 9444340496, 8754448477, 104 ஆகிய கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எஃப்.எம். விளம்பரங்கள் மூலமும் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அண்மையில் தமிழகத்திற்கு வந்த 1,89,780 பயணிகளில் 2,984 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, அரசு தரப்பில் வழக்கறிர், சானிடைசருக்கான மூலப்பொருள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், அதை நிறுத்திவைத்துள்ளோம் என தெரிவித்தார். முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்ய எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் கிருமி நாசிகனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு கிருமி நாசிகல் மற்றும் முக கவசங்கள் விற்பதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 23 ஆம் தேதித்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளிவைப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால், தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதுதொடர்பாகவும் அரசு தரப்பு விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணை மார்ச் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sanitizer face mask price issue case madras high court corona virus

Next Story
குடி போதையில் வாகனம் – கைது செய்ய ஐகோர்ட் உத்தரவுspot arrest for drunk and drive case madras high court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express