Advertisment

சைலேந்திர பாபு ஓய்வு: தமிழக டி.ஜி.பி பதவிக்கான போட்டியில் டெல்லி போலீஸ் கமிஷனர்?

தமிழக டி.ஜி.பி பதவிக்கான போட்டியில் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா களமிறங்கியுள்ளது புதிய திருப்பத்தை அளித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sanjay Arora Delhi police commissioner, enters fray for Tamil Nadu DGP post Tamil News

Tamil Nadu DGP Dr. C. Sylendra Babu - Delhi city police commissioner Sanjay Arora

Delhi police commissioner Sanjay Arora  for Tamil Nadu DGP post Tamil News: தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் (டி.ஜி.பி) சைலேந்திர பாபு வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். கன்னியாகுமரியைச் சேர்ந்த அவர் 1987-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். அவரை ஆளும் திமுக அரசு கடந்த 2021 மே மாதத்தில் காவல்துறைத் தலைவராக நியமித்தது. அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டது. அதனால், அவர் முதலில் ஜூன் 2022 இல் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.

Advertisment
publive-image

இந்த நிலையில், டி.ஜி.பி சி சைலேந்திர பாபு வருகிற ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார். அவரது ஓய்வைத் தொடர்ந்து, டி.ஜி.பி பதவிக்கான போட்டி மூத்த அதிகாரிகள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தப் போட்டியில் டெல்லி நகர காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா களமிறங்கியுள்ளது புதிய திருப்பத்தை அளித்துள்ளது.

சஞ்சய் அரோரா 1988 ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடரின் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். டெல்லியில் அவரது தற்போதைய பதவிக்காலம் டெப்யூடேஷன் தன்மையில் இருப்பதாகவும், அவர் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பதாகவும், அவரை தமிழக டி.ஜி.பி பதவிக்கு பரிசீலிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, உயர்மட்டப் பணிக்கு குறைந்தபட்சம் 11 டி.ஜி.பி தரவரிசை அதிகாரிகள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.

பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மாநில அரசுகள் தகுதியான அதிகாரிகளின் முழுப் பட்டியலையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு (யுபிஎஸ்சி) அனுப்ப வேண்டும். அது மூன்று பெயர்களைப் பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்பும். மூன்றில் ஒரு அதிகாரி அரசால் தேர்வு செய்யப்படுவார்.

publive-image

Sanjay Arora, a Tamil Nadu-cadre IPS officer who headed the paramilitary force ITBP

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் டி.ஜி.பி பதவிக்கான அதிகாரிகளின் தேர்வு மிகவும் சிக்கலாக தெரிகிறது. ஏனெனில் ஒரு சில அதிகாரிகள் காவல்துறைத் தலைவர் பதவிக்கு பரிசீலிக்க தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

1988 ஐபிஎஸ் அதிகாரிகளின் பேட்ஜில், சஞ்சய் அரோரா மட்டுமே இன்னும் பணியில் இருக்கிறார். 1989 பேட்ச்சைப் பொறுத்தவரை, 4 டிஜிபி தரவரிசை அதிகாரிகள் இன்னும் பணியில் இருந்தாலும், 3 பேர் வெவ்வேறு காரணங்களுக்காக தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். வருகிற ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால் பி.கந்தசாமியை அந்தப் பதவிக்கு பரிசீலிக்க முடியாது. ஆறு மாதங்களுக்கும் குறைவான பணிக்காலம் உள்ள எந்த அதிகாரியையும் ஒரு மாநிலத்தின் காவல்துறைத் தலைவர் பதவிக்கு பரிசீலிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.

மற்றொரு 1989-பேட்ச் அதிகாரியான பிரமோத் குமார், செப்டம்பர் 30, 2025 வரை பணிபுரிந்துள்ளார். ஆனால் அவரது பதவி உயர்வுகள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் ஆன அவர் தற்போது மாநில போக்குவரத்து திட்டமிடல் பிரிவின் (STPC) தலைவராக உள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக மார்ச் 18, 2021 முதல் இடைநீக்கத்தில் உள்ளதால் டி.ஜி.பி ராஜேஷ் தாஸும் போட்டியில் இல்லை.
1989 பேட்சின் 4வது அதிகாரியான பிரஜ் கிஷோர் ரவி, டிசம்பர் 31, 2023 அன்று தான் ஓய்வு பெறுகிறார். எனவே அவர் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தேவையான தகுதியைப் பெற்றுள்ளார்.

1990-பேட்ச்சில் 6 டிஜிபி-நிலை அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் மூத்தவர் சென்னை நகரத்தின் தற்போதைய ஆணையர் சங்கர் ஜிவால் ஆவார். அவரது பணிக்காலம் ஆகஸ்டு 31, 2025 உடன் முடிகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Sylendra Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment