ச.ம.க-வின் தலைவர் நடிகர் சரத்குமார் இன்று பா.ஜ.கவில் இணைந்தார். பிரதமர் மோடி காமராஜரை போல் ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தமிழக பா.ஜ.கவுடன் நடிகர் சரத்குமார் இணைந்தார். இந்நிலையில் இதைத்தொடர்ந்து சரத்குமார் அளித்த பேட்டியில் “ பா.ஜ.க-வில் இணைவது கட்சியின் முடிவு அல்ல. இது மக்கள் பணிக்கான ஆரம்பம். இது நாளைய எழுச்சிக்கான முடிவு. இந்த முடிவு தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளிடத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும். தலைவர் காமராஜரை போல ஆட்சி செய்கிறார் பிரதமர் மோடி. வலிமையான பா.ஜ.கவுடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன ? என்று முடிவு எடுத்து உள்ளோம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“