நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கல்லூரியின் 130ஆவது ஆண்டுவிழாவின் 3ஆம் நாள் நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் சரத் குமார் கலந்துகொண்டார்.
முன்னதாக நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமரவேண்டும் என்பதுதான்.அதற்காகதான் கட்சி நிர்வாகத்தை தொடர்ந்து சீர்படுத்தி வருகிறோம்.
எங்கள் இயக்கம் தொடங்கப்பட்ட முதல் நாள் முதல் இன்றுவரை மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது இதை எவரும் மறைக்க முடியாது.இதை தடுக்க தமிழக அரசு தனிப்படை அமைத்து போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது பாராட்டிற்குரியது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தோர்தலை பொருத்தவரை எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய நிறைய கால அவகாசம் இருக்கிறது.
இருப்பினும் எந்தக் கட்சி அதிக இடங்கள் ஒதுக்கீடு செய்கிறார்கள் என்பதும் இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, “அதிமுக வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது வாழ்த்துகளை தொரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையடுத்து அவரிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செய்தியாளர் ஆன்லைன் ரம்மி தொடர்பாக கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த சரத் குமார், அது கடந்த 2 ஆண்டுக்கு முன்பு நடித்த விளம்பரம். இதற்கு நான் பலமுறை பதில் கூறிவிட்டேன்” என்றார்.
மேலும் ராகுல் காந்தி தொடர்பாக கேள்விக்கு, அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஜனநாயக செயல் அல்ல” எனப் பதில் அளித்தார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“