3வது முறை மோடி வெற்றி பெறவும், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராதிகா வெற்றி பெறவும் வேண்டி, விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்தார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். இதையொட்டி, அவரது கணவரும் பா.ஜ.கவின் முக்கிய தலைவருமான சரத்குமார் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் நாளை மக்களைவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார். ராதிகா வெற்றி பெற வேண்டும் எனவும், 3வது முறையாக நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும் எனவும் விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் வேண்டிக்கொண்டு, அங்கப்பிரதட்சம் செய்தார்.
சரத்குமார் உடன் ராதிகாவும் இணைந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இருவரும் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதுதொடர்பாக காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.