ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் சரண் அடையவில்லை. நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால்,தற்போதைய நிலையில் சரணடைய இயலாது. எனவே, கால அவகாசம் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகம் மற்றும் இந்தியா மட்டுமல்லாது,வெளிநாடுகளிலும் கிளை உள்ள ஹோட்டல்களில் ஒன்று சரவணபவன் ஆகும். இதன் உரிமையாளர் ராஜகோபால். இந்த நிலையில் இவருக்கு தனது நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி மீது ஆசை ஏற்பட்டது. ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் வளர்ச்சி பன்மடங்கு அடையலாம் என ஜோதிடர்களும் தங்கள் பங்குங்கு, ராஜகோபாலை உசுப்பேற்றி இருந்தனர்.
இந்நிலையில் ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால்., 2001ம் ஆண்டு கொடைக்கானலுக்கு பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்தி சென்று, ராஜகோபாலின் தூண்டுதலின் பேரில் கொலை செய்யப்பட்டார்.
ராஜகோபால் இதைமுதலில், மறுத்தநிலையில், கடத்தியவர்களில் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார். இதையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 55 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். இதில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. இத்தீர்ப்பையும் எதிர்த்து, ராஜகோபால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் அவர் ஜூலை 7-ஆம் தேதிக்குள் சரணடையவும் கெடுவிதித்தது. இதனால் நேற்று அவர் சரணடைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால்,தற்போதைய நிலையில் சரணடைய இயலாது. எனவே, கால அவகாசம் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தகவலை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் ராஜகோபால் தரப்பு முடிவு செய்துள்ளனர். 2001 ஆண்டில் தொடங்கிய சாந்தகுமார் கொலை வழக்கின் விசாரணை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர் கதை போல நீள்கிறது.