Advertisment

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்... மரணப்படுக்கை வரை இழுத்து வந்த சாந்தகுமார் கொலை வழக்கு!

ஜீவஜோதியை மூன்றாவது மனைவியாக மணந்து கொண்டால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்று ராஜகோபாலுக்கு ஜோசியம் கூறியதால் ஏற்பட்ட விளைவு

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Saravana Bhavan Owner Rajagopal passed away, Dosa King P Rajagopal Saravana Bhavan case

Saravana Bhavan Owner Rajagopal passed away

Saravana Bhavan Owner Rajagopal passed away  : தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகிறது சரவணபவன் உணவு விடுதிகள். ஒரு காலத்தில் அனைவருக்கும் இன்ஸ்பிரேசனாகவே இருந்து வந்தார் ராஜகோபால் என்றால் மிகையாகாது. ஆனாலும் ஜோசியமும் நேரங்காலமும் யாரைத்தான் விட்டு வைத்தது.

Advertisment

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஜீவஜோதி. இவருடைய தந்தை ராமசாமி சரவணபவன் உணவகத்தின் துணை மேலளராக பணியாற்றி வந்தார். ஜீவஜோதியை மூன்றாவது மனைவியாக மணந்து கொண்டால் அவருடைய வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்று ராஜகோபாலுக்கு ஜோசியம் கூற, 90களின் பிற்பாதியில் இருந்தே ஜீவஜோதியை மணந்து கொள்ள கூறி கட்டாயப்படுத்தி வந்தார்.

கே.கே. நகரில் சரவணபவன் ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்தார் ராமசாமி. 1994ம் ஆண்டு முதல் ராஜகோபாலுக்கு ஜீவஜோதியை மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அப்போது ஜீவஜோதி 12ம் வகுப்பு மாணவி மட்டுமே.  ராஜகோபாலின் நோக்கம் அறிந்து தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டார் ராமசாமி. பின்பு குடியிருப்பு பகுதியில் இருந்து அந்த குடும்பம் மிகுந்த நெருக்கடியுடன் வெளியேறியது.

ராஜகோபாலின் திட்டம் ஏதும் தெரியாமல், தன்னுடைய சகோதரனுக்கு டியூசன் எடுக்க வந்த சாந்த குமாரை காதலிக்க துவங்கினார். 1999ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி சாந்தகுமாரை மணந்து கொண்டார். வேளச்சேரியில் தங்கியிருந்த அந்த தம்பதியினருக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தார் ராஜகோபால்.  முதலில் டேனியல் என்பவரை வைத்து சாந்தகுமாரை கொலை செய்ய ஏவினார் ராஜகோபால். அதற்காக 5 லட்சம் ரூபாய் பணமும் அளி்த்தார். ஆனால் டேனியல் முதலில் பிரின்ஸிடம் 5000 ரூபாயை கொடுத்து மும்பையில் போய் புதிய வாழ்வை வாழ் என்று சாந்தகுமாரை எச்சரித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் சரவணபவன் உரிமையாளார் ராஜகோபாலால் எங்களுக்கு ஆபத்து உள்ளது என்று கூறி காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனாலும், அக்டோபர் 24ம் தேதி விருதுநகரில் ஜீவஜோதியின் கண்முன்னே சாந்தகுமார் கடத்தப்பட்டார். அதே நாளில் அவர் கொடைக்கானலில் வைத்து கொலையும் செய்யப்பட்டார். ஒரு வாரம் கழித்து அவருடைய உடல் வனத்துறையினரால் அக்டோபர் மாதம் 31ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

கொலை வழக்கு கடந்து வந்த பாதை

ஜீவஜோதியின் புகாரை தொடர்ந்து இந்த விசயம் வெளிச்சத்திற்கு வந்தது. 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி சரணடைந்தார் ராஜகோபால். இ‌ந்த வழ‌க்‌கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜகோபாலுக்கு 10 ஆ‌ண்டு ‌கடுங்காவல் சிறை‌த் த‌ண்டனையு‌ம், 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது. கொலைக்கு உதவி புரிந்த கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், ஹூசை‌ன், , முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோரு‌க்கு 9 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனையும் விதித்தது. கட‌த்த‌ல் வழ‌க்‌கி‌ல் ராஜகோபாலு‌க்கு 3 ஆ‌ண்டு‌ம், ம‌ற்ற 8 பேரு‌க்கு 2 ஆ‌‌ண்டுக‌ளும் த‌‌ண்டனை ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2009ம் ஆண்டு மேல்முறையீடு செய்தார் ராஜகோபால். ஆனால் நீதிமன்றம் அவருடைய 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக அறிவித்தது.  இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் ராஜகோபால். ஆனால் இந்த வருடம் மார்ச் மாதம் அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வருடம் மார்ச் மாதம் 29ம் தேதி ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும் ஜூலை 7ம் தேதிக்குள் ஆஜராகவும் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகள், டேனியல், தமிழ்செல்வன், சேது, காசி என்ற காசிவிஸ்வநாதன், கார்மேகம், ஜாகீர் உசேன், பாலு, பட்டு ராஜன், முருகானந்தம் ஆகியோர் சென்னை 4 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜூலை 8ம் தேதி ஆஜரானார்கள்.  ஆனால் ராஜகோபாலோ உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை கூறி, கால அவகாசம் கேட்டார். ஆனால் அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஸ்ட்ரெச்சரில் வந்தபடி ஆஜரானார் ராஜகோபால்.

நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை மோசமடைந்து வந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறைக்கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்தனர் அவருடைய மகன்கள். ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையை பார்வையிட்ட நீதிபதிகள் அதற்கு ஒப்புதல் வழங்கினர். அதன் பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் இன்று காலையில் அவர் உயிரிழந்தார்.

மேலும் படிக்க : தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment