Advertisment

Tamil Nadu news today updates: ஒரே நாளில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் தரிசனம்; உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் நிதியுதவி!

Chennai Petrol Diesel Price : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.18 பைசாவிற்கும், டீசல் விலை ரூ. 69.96 பைசாவிற்கும் விற்பனை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates : கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை 6ம் தேதி ராஜினாமா செய்தனர். அவர்களுடைய ராஜினாமாவை சபாநாயகர்  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் அந்த எம்.எல்.ஏக்கள்.  இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக்  குப்தா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது. நேற்று வழங்கிய தீர்ப்பு குறித்து முழுமையான தகவல்களைப் பெற

Advertisment

Karnataka Crisis

அதில் ஒரு குறிப்பிட்ட காலநேரத்தில் சபாநாயகரை ஒரு முடிவெடுக்க வற்புறுத்த இயலாது என்றும், எம்எல்ஏக்கள் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சபாநாயகர் நிர்ப்பந்திக்க கூடாது  என்றும் தீர்ப்பளித்தனர்.  இது தமிழக அரசியலிலும் பெரும் மாற்றத்தை விளைவிக்கக்கூடிய முக்கியமான தீர்ப்பாகும்.  இந்நிலையில் இன்று கர்நாடக சட்டசபையில் முதலமைச்சர் குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 11 30 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும் படிக்க : எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு செக் வைக்க காத்திருக்கும் 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு!

Southwest Monsoon Kerala Rains

கேரளாவில் இன்று துவங்கி, அடுத்த 5 நாட்களுக்கு கனமழை கொட்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. கேரளாவில் மூணார், வயநாடு, மற்றும் இதர சுற்றுலா தளத்திற்கோ அல்லது உறவினர்கள் வீட்டிற்கோ செல்ல விரும்பினால், அங்கே நிலவரம் என்ன என்று அறிந்துவிட்டு பிறகு கேரளாவிற்கு செல்லுங்கள்... மேலும் படிக்க : கேரளாவை மிரட்ட காத்திருக்கும் தென்மேற்கு பருவமழை… மலையாள தேசம் செல்பவர்கள் பொறுமை காக்கவும்!

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, rain, train services, political events, BiggBoss 3, : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    21:14 (IST)18 Jul 2019

    நாளை மதியம் 1.30 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் - ஆளுநர் கடிதம்

    கர்நாடக பேரவையில் நாளை மதியம் 1.30 மணிக்கு குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வாஜூபாய் வாலா கடிதம் எழுதியுள்ளார். எம்எல்ஏக்களின் அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் கர்நாடக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    20:34 (IST)18 Jul 2019

    ஜூலை 22ல் புதுச்சேரி சட்டசபை

    புதுச்சேரி சட்டப்பேரவை வரும் திங்கட்கிழமை காலை 9.35 மணிக்கு கூடுகிறது என சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். 2019 -20 ஆம் நிதி ஆண்டிற்கான, நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது என சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார்

    20:03 (IST)18 Jul 2019

    அத்திவரதர் தரிசனம் - உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் நிதியுதவி

    அத்திவரதரை தரிசிக்க, பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 10 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 200 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1200 மீட்டர் தொலைவுக்கு தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று வரை 25 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர், இன்று மட்டும் மாலை வரை 1.7 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார்.

    19:41 (IST)18 Jul 2019

    தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடை

    தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடைசெய்யப்படும் என பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டிக் டாக் செயலியால் தவறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    19:20 (IST)18 Jul 2019

    அத்திவரதர் தரிசனம்; இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் - மு.க.ஸ்டாலின்

    அத்தி வரதர் உற்சவத்தில் பக்தர்கள் உயிரிழந்தது குறித்து ஸ்டாலின் கேள்வி கேட்டபோது, "3 அல்லது 4 பேர் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது, இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    18:34 (IST)18 Jul 2019

    கர்நாடக சட்டசபையில் கடும் அமளி - அவை ஒத்திவைப்பு

    கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டதால், நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைத்தார் சபாநாயகர். இன்று இரவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அறிவுறுத்திய நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    18:18 (IST)18 Jul 2019

    அத்திவரதர் தரிசனம் - 4 பேர் பலி

    காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்

    17:43 (IST)18 Jul 2019

    தமிழில் தபால்துறை தேர்வு என்ற அறிவிப்பு இந்த ஆண்டுக்கு மட்டுமா?

    தமிழில் தபால்துறை தேர்வு என்ற அறிவிப்பு இந்த ஆண்டுக்கு மட்டுமா? இல்லை வரும் ஆண்டுகளுக்கும் பொருந்துமா? என்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் ஜூலை 23ம் தேதி தமிழக அரசு பதிலளிக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

    17:16 (IST)18 Jul 2019

    தேனியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி!

    தேனியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என மத்திய அரசிடம் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் கோரிக்கை வைத்துள்ளார். தேனி தொகுதிக்குட்பட்ட பகுதியில் கேந்திரிய பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பெரியகுளம் அருகே வடவீர நாயக்கன்பட்டியில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் பள்ளியை அமைக்கக் கோரிக்கை கேந்திரிய வித்யாலயா தொடங்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு ஏற்கனவே எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    16:56 (IST)18 Jul 2019

    மூதாட்டி பலி!

    காஞ்சிபுரம்  அத்தி வரதர் வைபவத்திற்கு வருகை புரிந்த முதியவர்கள் 20க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். அவர்கள் விரைவாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினார். 

    16:53 (IST)18 Jul 2019

    டாக்டர் ரவீந்திரநாத் பேட்டி!

    அரசு மருத்துவ கல்லூரிகளில் அவசர சிகிச்சை (Emergency care technician) தொழில்நுட்புநர் படிப்பை பயின்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பை வழங்காவிட்டால் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டாக்டர் ரவீந்திரநாத் எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் அவசரசிகிச்சை தொழில் நுட்புநர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது கடந்த 2005 ஆம் ஆண்டு ,அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவ கல்லூரிகளில் அவசரசிகிச்சை தொழில் நுட்புநர் ஓராண்டுப் படிப்பு தொடங்கப்பட்டது என்று தெரிவித்த ரவீந்திரநாத் 2005 முதல் தற்போதுவரை இப்படிப்பை பயின்ற ஒருவருக்கும் தமிழக அரசு வேலைவாய்ப்பை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    தங்களின் கோரிக்கையினை அரசு ஏற்காவிட்டால் வரும் ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இதில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றார்.

    16:46 (IST)18 Jul 2019

    தென்காசி மாவட்டம் அறிவிப்பு!

    தென்காசி மாவட்டம் அறிவிப்பை முன்னிட்டு தென்காசி காசி விசுவநாதர் கோவில் முன்பு அதிமுக வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இன்று காலை தமிழக எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு  புதிய மாவட்டமாக தென்காசியை அறிவித்திருந்தார். 

    16:44 (IST)18 Jul 2019

    வெளியே வரும் சசிகலா!

    சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே சசிகலா விரைவில் வெளியே வர இருப்பதாக அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில் ” நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் -” என அவர் தெரிவித்துள்ளார். 

    16:23 (IST)18 Jul 2019

    கோடநாடு வழக்கு!

    நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையதாக சயன், மனோஜ் சாமி, தீபு, ஜித்தின் ஜாய், ஜம்ஷேர் அலி, சந்தோஷ்சாமி, உதயகுமார், வாளையாறு மனோஜ், பிஜின் குட்டி, சதீசன் ஆகிய 10 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான விசாரணை வரும்  ஆகஸ்ட்  1 ஆம் தேதி நடைபெறும் என உதகை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    16:03 (IST)18 Jul 2019

    விடுமுறை அறிவிப்பு!

    வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும்  என்றும்  வேலூர் மாவட்ட ஆட்சிரியர்  தெரிவித்துள்ளார். 

    15:45 (IST)18 Jul 2019

    வேட்பு மனு தாக்கல் நிறைவு!

    வேலூரில், நிறுத்தி வைக்கப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன்  நிறைவடைந்தது.  இதுவரை 50 பேர் மனு தாக்கல்  செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது., இந்த வேட்பு மனுக்கள் மீதான் விசாரணை நாளை நடைபெறுகிறது. 

    15:34 (IST)18 Jul 2019

    வேலூரில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை!

    வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக - திமுக - நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி  என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இங்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுகவும் போட்டியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது  என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலில் முழு கவனம் செலுத்துவதால் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

    15:15 (IST)18 Jul 2019

    தமிழச்சி தங்க பாண்டியன் கன்னி பேச்சு

    மக்களவையில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தனது கன்னிப்பேச்சை பேசினார். அதில், ”இந்தியா தொழிலாளர்களை அடிப்படையாக கொண்டு வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. நிதித்துறை தனிப்பொறுப்பை ஏற்றிருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துக்கள். அவர் எங்கள் தமிழ் மண்ணை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன். தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் பெண்கள் தாலிக்கு தங்கம் வாங்குவது கூட கனவாகி உள்ளது. பட்ஜெட்டில், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை, விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை” என பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். 

    14:50 (IST)18 Jul 2019

    வைகோ தண்டனை நிறுத்தி வைப்பு

    தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    13:58 (IST)18 Jul 2019

    மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

    அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி , திருநெல்வேலி, கன்னியாகுமரி ,திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் கன மழை பெயக்கூடும். அதோடு தென்மேற்கு திசையில் சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் மாலத்தீவு , மன்னார் வளைகுடா, குமரிகடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். ஆகவே அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    13:56 (IST)18 Jul 2019

    பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம்

    பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார். 

    13:17 (IST)18 Jul 2019

    உச்ச நீதிமன்றத்தில் தமிழ்

    பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை நேற்று பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று தமிழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் 9 மொழிகளில் நேற்று வெளியிடப்பட்டன. தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று தமிழிலும் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் வழக்கு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம்​ செய்யப்பட்டுள்ளது. 

    13:14 (IST)18 Jul 2019

    ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு!’

    ஆம்னி பேருந்துகளுக்கு இனி ஒரு இருக்கைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரி விதிக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2,500 என புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

    13:13 (IST)18 Jul 2019

    மீனவ இளஞர்களுக்கு நடமாடும் மீன் விற்பனை நிலையம்

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ரூ 31.15 கோடி செலவில் மீனவ இளஞர்களுக்கு நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகராட்சி அதிகாரிகள் குழு, கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவார்கள் எனவும் இந்த சிறப்பு சிறப்பு குறை தீர்வு திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்ட மன்றத்தில் தெரிவித்துள்ளார். 

    13:06 (IST)18 Jul 2019

    கக்கன், நல்லகண்ணு குடும்பத்தினருக்கு வாடகையில்லா வீடுகள்

    கக்கன், நல்லகண்ணு குடும்பத்தினர் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும், அவர்களின் குடும்பத்திற்கு வாடகை இல்லாமல் வீடு ஒதுக்கப்படும் எனவும் பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

    12:28 (IST)18 Jul 2019

    விரைவில் கும்பகோணம் மாவட்டம்

    தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகியவைகள் தமிழகத்தின் 34 மற்றும் 35-வது மாவட்டமாக இன்று அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கும் கோரிக்கை உள்ளதால், அதுபற்றியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். 

    11:55 (IST)18 Jul 2019

    தென்காசி & செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாகின்றன

    இன்றைய சட்டமன்றத்தில் தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் தமிழகத்தின் 34 மற்றும் 35வது மாவட்டங்களாக உதயமாகும் என்று முதல்வர் அறிவிப்பு. நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்படுகிறது. கீழ் சிவகிரி,அம்பாசமுத்திரம்,

    கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டாரங்கள் வருகின்றன. காஞ்சியில் இருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    11:34 (IST)18 Jul 2019

    திங்கள் கிழமை விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2

    15ம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்தது சந்திரயான் 2. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் வருகின்ற திங்கள் கிழமை சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.  சரியாக மதியம் 2 மணி 43 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்துள்ளது இஸ்ரோ. 

    11:00 (IST)18 Jul 2019

    சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மரணம்

    சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் 9ம் தேதி மருத்துவ உதவிகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் சிறைக் கைதிகளுக்கான பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் முறையீடு செய்தனர். அதன் அடிப்படையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மரணமடைந்தார். 

    10:48 (IST)18 Jul 2019

    நளினியின் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்

    நளினி மனு தள்ளுபடி 7 பேர் விடுதலை தொடர்பாக  அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த வழக்கு விசாரிக்க தகுந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதில் சுப்பைய்யா மற்றும் சரவணன். 

    10:36 (IST)18 Jul 2019

    தமிழக அரசு பள்ளிகளில் இந்தியில் பயோமெட்ரிக்

    தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவை உறுதி செய்யும் பயோமெட்ரிக் கருவியில் முன்பு ஆங்கிலம் மட்டுமே இருந்தது. தற்போது இந்தியிலும் எழுத்துக்கள் உள்ளன. புதிதாக இந்தி இணைக்கப்பட்டிருப்பதாக தகவல்.

    10:20 (IST)18 Jul 2019

    குல்பூஷண் ஜாதவ் விவகாரம்

    குல்பூஷண் ஜாதவிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். மேலும் குல்பூஷனை விடுதலை செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவில்லை. எனவே இந்த விவகாரத்தில் ஆலோசனைக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.

    09:46 (IST)18 Jul 2019

    நளினியின் கோரிக்கையை விசாரிக்கலாமா ? இன்று 10:30 மணிக்கு தீர்ப்பு!

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை விசாரணைக்கு உகந்ததா என்று இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் தீர்ப்பளிக்க உள்ளனர்.

    09:27 (IST)18 Jul 2019

    தேச துரோக வழக்கு : வைகோவின் மேல் முறையீடு இன்று விசாரணை

    தேச துரோக வழக்கில் மதிமுக தலைவர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம். இந்த சிறை தண்டனையை எதிர்த்து வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவின் விசாரணை இன்று பிற்பகல் 02:15 மணிக்கு நடைபெற உள்ளது.

    09:16 (IST)18 Jul 2019

    கடல் சீற்றத்துடன் இருக்கும் கன்னியாகுமரி கடல் பகுதி

    கன்னியாகுமரியின் சின்னமுட்டம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆழ்கடலில் 2 நாட்களுக்கு காற்றின் வேகம் மிக அதிமகாக இருக்கும் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

    09:04 (IST)18 Jul 2019

    Tamil Nadu Premier League

    4வது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இந்த வருடம் தொடங்க இருப்பதை முன்னிட்டு ஆன்லைனில் டிக்கெட் விற்பனைகள் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நாளை துவங்கி இந்த போட்டிகள் ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. நெல்லை மற்றும் திண்டுக்கல் மைதானங்களில் 32 போட்டிகள் நடைபெற உள்ளாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    09:02 (IST)18 Jul 2019

    கும்பகோணத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம்

    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறி கும்பகோணத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Tamil Nadu news today updates : அகரம்  தொண்டு அமைப்பின் நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, மும்மொழிக் கொள்கை குறித்தும், தொடர்ந்து அரசுப் பள்ளிகள் மூடப்படுவது குறித்தும், பொதுத் தேர்வுகள் குறித்தும்,  நீட் போன்ற நுழைவு தேர்வுகள் குறித்தும் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.  மேலும் அது தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.  அவரின்  இந்த கருத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்நிலையில் நேற்று சூர்யாவிற்கு ஆதரவாக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தார். அதேபோன்று பல்வேறு தரப்பில் இருந்தும் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.  நேற்றிரவு தனக்கு ஆதரவளித்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சூர்யா. அமைச்சர் ஜோதிமணி, இயக்குநர் பா.ரஞ்சித் போன்றோரும் தங்களின் ஆதரவினை நடிகர் சூர்யாவிற்கு தெரிவித்தனர்.

    நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்த முழுமையான தகவல்களைப் பெற

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment