சர்க்கார் பட முதல் காட்சி போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி வெளியானதற்கு அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சர்கார் … விஜய் நடிப்பில் தயாராகும் 62-வது படத்தின் பெயர் இது! நாளை விஜய் பிறந்த நாள் கொண்டாடும் வேளையில் இன்று படத்தின் பெயர் வெளியாகியிருக்கிறது.
சர்கார் என படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சரமாரியாக ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள்.
முன்னதாக இன்று காலையில் இருந்து கவுண்ட் டவுன் மாதிரி, தளபதி 62 படத்தின் பெயர் அறிவிப்பு தொடர்பாக சன் பிக்சர்ஸ் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. மாலை 6 மணிக்கு விஜய் சிகரெட் பற்ற வைக்கும் காட்சியான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 21 June 2018
விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியை போஸ்டராக வெளியிட்டிருப்பது, படத்தின் பெயரை சர்கார் என அமைத்திருப்பது எல்லாமே படத்திற்கு முந்தைய சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பதை உணர்த்துகிறது.
சினிமாக் காட்சிகளில் புகைப் பிடிக்கும் காட்சிகள் அமைக்கக் கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார்.
Shame on Actor Vijay for promoting Smoking in this first look of his next movie.#ActResponsibly #DoNotPromoteSmoking
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 21 June 2018
ரஜினிகாந்த் அதன்பிறகு புகைப் பிடிக்கும் காட்சிகளை தவிர்த்தார். விஜய்-யும் அன்புமணி வலியுறுத்திய காலகட்டத்தில், ‘இனிமேல் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என பேட்டி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை மீறி தற்போது புகைப்பிடிக்கும் காட்சியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக விஜய் வெளியிட்டிருப்பது விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.
You’ll look more stylish without that cigarette.#SmokingKills #SmokingCausesCancer pic.twitter.com/UUvzgrffHN
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 21 June 2018
விஜய், ‘இனிமேல் புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என அறிவித்து பேட்டி கொடுத்த நாளிதழின் பிரசுரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் டாக்டர் அன்புமணி, இது தொடர்பாக விஜய்-க்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.