சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக் கூறி, தங்களுக்கு சொந்தமான 148 கோடி ரூபாயை முடக்கி வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நவீன் பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில், வருமான வரித் துறை துணை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
லட்சுமி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வந்த நவீன் பாலாஜி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து 2000ம் ஆண்டு அன்னிய செலாவணி மற்றும் ரிசார்ட், ஹோட்டல் தொழிலை துவங்கினார். ரிசார்ட் தொழில் லாபம் ஈட்டாததால், 2016ம் ஆண்டு அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அப்போது, சசிகலாவின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டு சிலர் தன்னை அணுகி, இந்த சொத்துக்களுக்கு 168 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக, 148 கோடி ரூபாய் அளவுக்கு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சசிகலாவின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டவர்கள் கொடுத்துள்ளனர். பின், இந்த பரிவர்த்தனை திடீரென ரத்து செய்யப்பட்டது.
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…
இந்த பின்னணியில், நவீன் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 148 கோடி ரூபாய் பணத்தை, சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக்கூறி, முடக்கி உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நவீன் பாலாஜி உள்பட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், ரிசார்ட்டுக்கான கிரையத் தொகையை, மதிப்பு இழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பெறும்படி, சசிகலாவின் பிரதிநிதிகள் தன்னை நிர்பந்தித்ததாகவும், கடைசியில் இந்த பரிவர்த்தனையை ரத்து செய்வதாக தெரிவித்ததாகவும், பணத்தை திருப்பிக் கொடுக்க இருந்த வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து முடக்கி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பணம், பினாமி பரிவர்த்தனை பணம் எனக் கூறுவது தவறானது என்பதால், முடக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இதுதொடர்பாக, பிப்ரவரி 19ம் தேதி பதிலளிக்கும்படி, வருமான வரித் துறை துணை ஆணையருக்கு உததரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.