Advertisment

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.

கர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனை கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasikala, DIG Roopa, parappana agrahara jail,

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று (20.3.19) நள்ளிரவு  சென்னை மருத்துவமனையில்  உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா இன்று  பரோலில் வெளிவருகிறார்.

Advertisment

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் ம.நடராசன் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, திடீரென்று அவரின் உடல் நிலை மோசமானதால்  சென்னை உள்ள  பிரபல மருத்துவமனையில்  திவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு  1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன் உயிர் பிரிந்தது. நடராஜனின் உடல் எமாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்படும்.  அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றுள்ள சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுளது. அவர், இன்று சென்னை வருகிறார்.

கர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனை கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும். ஆனால் சசிகலா கடைசியாக பரோலில் விடுதலையாகி 5 மாதங்கள் முடிவடைந்து உள்ளது. இந்நிலையில், கர்நாடக சிறை நிர்வாகம் மீண்டும் சசிகலாவுக்கு பரோல் வழங்கியுள்ளது.  காலை 10 மணிக்கு மேல் அவர், சசிகலா பரோலில் வெளிவருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment