சசிகலா இன்று டிஸ்சார்ஜ்: தமிழகம் திரும்புவது எப்போது?

Sasikala Natarajan to be discharged from hospital : பொதுவாக, ஒருவருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டால் 14 நாட்களுக்குள் அது எப்போது வேண்டுமானாலும் தீவிரம் அடையலாம்

By: Updated: January 31, 2021, 07:35:26 AM

பெங்களூர் அரசு மருத்துவமனையில் இருந்து வி.கே  சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சசிகலா தனிமைப்படுத்தலை தொடர வேண்டிய நிலையில் இருக்கிறார். எனவே மேலும் சில நாட்கள் அவர் பெங்களூருவில் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” இன்றுடன் சசிகலா நடராஜன் பத்து நாட்கள் சிகிச்சையை முடித்துள்ளார். நோய்த் தொற்று அறிகுறியற்ற அடிப்படையில் உள்ளார். அனுமதிக்கப்பட்ட  மூன்று நாட்களிலிருந்து போதுமான ஆக்ஸிஜன் அளவுடன் காணப்படுகிறார்.

மருத்துவ நெறிமுறையின்படி, அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படலாம்

நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்ப சசிகலா தயாரான நிலையில் உள்ளார் என அவரை கண்காணித்த மருத்துவ குழு முடிவெடுத்துள்ளது. மேலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்  கொள்ள வேண்டும் என்ற  ஆலோசனையுடன் நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.

சசிகலா கடந்த 27ம் தேதியன்று, சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், கொரோனா பெருந்தொற்று  உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், சசிகலா தமிழகம் எப்போது திரும்புவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொதுவாக, ஒருவருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டால் 14 நாட்களுக்குள் அது எப்போது வேண்டுமானாலும் தீவிரம் அடையலாம் என மருத்துவ நெறிமுறைகள் தெரிவிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Sasikala natarajan to be discharged from hospital on sunday will be in home quarantine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X