Sasikala Returns Minister Jayakumar Press meet : அதிமுக கட்சியில் உள்ள எட்டப்பர்கள் களையெடுக்கப்பட வேண்டும். உடம்பில் அதிமுக இரத்தம் ஓடாதவர்கள் தான் இப்படி செயல்படுவார்கள்
Sasikala Returns Minister Jayakumar Press meet : அதிமுக கட்சியில் உள்ள எட்டப்பர்கள் களையெடுக்கப்பட வேண்டும். உடம்பில் அதிமுக இரத்தம் ஓடாதவர்கள் தான் இப்படி செயல்படுவார்கள்
அதிமுகவில் உள்ள சில எட்டபர்கள் களையெடுக்கப்பட வேண்டியவர்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Advertisment
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், " வரலாற்றில் வீரத்தையும், ஆளுமையும் பேசிய அதே நேரத்தில், எட்டப்பர்களையும் பேசி இருக்கிறோம். அதிமுக கட்சியில் உள்ள எட்டப்பர்கள் களையெடுக்கப்பட வேண்டும். உடம்பில் அதிமுக இரத்தம் ஓடாதவர்கள் தான் இப்படி செயல்படுவார்கள். கட்சிக்குள் மிகக் குறைவான அளவிலேயே இத்தகைய நபர்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார்.
Advertisment
Advertisements
அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்; அவர்கள் விரைவில் களை எடுக்கப்படுவார்கள்
மேலும், அதிமுக - அமமுக இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "100% வாய்ப்பில்லை என்று பலமுறை தெரிவிக்கப்பட்டது. முதல்வர் தனது டெல்லி பயணத்தின் போதும் இதை தெளிவுபடுத்திவிட்டார். அதிமுக நிலைப்பாடும் இக்கருத்தையொட்டிதான் உள்ளது. எனவே, ஒருங்கினைப்பளார், இணை ஒருங்கினைப்பளார், மாவட்ட நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் எனத் தனித்தனியாக கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.
இன்று காலை பெங்களூரில் இருந்து கிளம்பிய சென்னையை நோக்கி பயணித்து வருகிறார். சசிகலா வாகனத்தை 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர வேண்டும் என்றும், பட்டாசு இசை வாத்தியங்கள், அதிமுக கொடி மற்றும் பேனர்கள் வைக்கவும் தமிழக காவல்துறை தடை விதித்தது.
காவல்துறை அறிவுறுத்தலையும் மீறி சசிகலா தனது காரில், அதிமுக கொடியை பயன்படுத்தினார். பின்னர், தமிழக எல்லையில் சசிகலா காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது. இதன் பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளர் காரில் அதிமுக கொடியுடன் பயணிக்கத் தொடங்கினார்.
தடையை மீறி 100க்கும் மேற்பட்ட கார்கஓள் சசிகலாவின் காரை பின் தொடர்ந்தது. செல்பி, சாமி தரிசனம், ட்ரோன் வரவேற்பு, பேனர், பட்டாசு என அமமுமவினர் சசிகலாவின் வருகையை அதகளப்படுத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil