அதிமுகவை ஒன்றிணைக்கு வேலைகள் நடைபெற்று வருகிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை சிக்கல் தொடர்ந்து கோண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஒருவரை ஒருவர் கடுமையக விமர்சித்து வருகின்றனர். தனிக் கட்சி ஆரம்பித்து நிரூபிக்கட்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பன்னீர் செல்வம் சவால் விட்டார்.
இந்நிலையில் சென்னை கீழ்பாகத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிதுமஸ் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சசிகலா கூறியதாவது “ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆனையத்தில் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன். வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை வழங்கலாம் என்று நாங்கள் சொன்னோம். ஆனால் ஜெயலலிதா மறுத்துவிட்டார். அதிமுக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். நான் யார் பக்கமும் இல்லை. அனைவருக்கும் பொதுவான நபராகவே செயல்படுகிறேன். அதிமுகவை அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிவிட்டேன்” என்று அவர் கூறினார்.