கணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா!

சசிகலா, 15 நாள் பரோலில் சிறையில் இருந்து வெளி வந்தார்

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, கணவர் நடராசன் காலமானதையொட்டி, 15 நாள் பரோலில் வெளியே வந்துள்ளார்.

அவர், பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி வழியாக சாலை மார்க்கமாக தஞ்சை செல்கிறார். தஞ்சையில் உள்ள விளார் தான் நடராசனின் சொந்த ஊர். அங்கு தான் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.

முன்னதாக, நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு சசிகலா கணவர் நடராசனின் உயிர் சென்னை குளோபல் மருத்துவமனையில் பிரிந்தது. இதையடுத்து, அவரது உடல் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு, காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது உடல் விளாருக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது சிறையில் இருந்து வெளிவந்துள்ள சசிகலா, இன்று மாலை 6 அல்லது 7 மணியளவில் தஞ்சை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sasikala out from jail on the way to thanjavur

Next Story
ஒரு மதத்துக்கு ஆதரவாக 144 தடை உத்தரவா? – நெல்லை ஆட்சியரை கண்டிக்கும் கனிமொழி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express