வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, உடல்நலக் குறைவால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக, காய்ச்சல் மற்றும் முதுகுவலி காரணமாக சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மூச்சுத் திணறல் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டதால் பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
சசிகலா ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள் இருப்பதால் கோவிட்- 19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#Sasikala brought to Bengaluru’s Bowring Hospital from Parappana Agrahara prison complex after complaining of cold, cough and breathlessness.@TOIBengaluru @TOIChennai @timesofindia #ADMK @Saravananjourno @mahajournalist @aselvarajTOI @Raghuvp99 pic.twitter.com/hNKPBnXpsT
— Petlee Peter (@petleepeter) January 20, 2021
ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆவார் என்று ஊர்ஜிதமான செய்திகள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சசிகலா உடல்நலப் பாதிப்பால் விடுதலையில் மாற்றமில்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து ஊடகத்திடம் பேசிய அவர், ” சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது, குடும்ப உறுப்பினர்களிடம் முறையாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. 27ம் தேதி விடுதலைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏனெனில், சிறையில் உள்ள ஒரு நபருக்கு மருத்துவ சிகிச்சையளிப்பது சிறைத்துறையின் பொறுப்பு. சிறைத்துறையின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் தான் தற்போது சசிகலா இருக்கிறார். அந்த அடிப்படையில், மருத்துவமனை அனுமதி கூட சிறை வாசகத்துக்கு உட்பட்டதுதான். எனவே, 27ம் தேதி விடுதலையில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்தார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 27-ம் தேதி காலையிலேயே சசிகலா விடுதலை செய்யப்பட்டுவிடுவார் எனத் தெரிவித்தார்.
செல்வி செயலலிதாவுடன் இணைந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தண்டனையைப் பெற்றார். பிறகு மேல்முறையீடு செய்து விடுதலையானார். ஆனால் மீண்டும் 2017 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Sasikala oxygen level go down rushed to bowing hospital sasikala health updates
அரசியலை விட்டு விலகுகிறேன், தொண்டர்களுக்கு நன்றி! – சசிகலா அறிவிப்பு
எம்ஜிஆர் குரல்… எம்ஜிஆர் வேடம்… நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ
ஜேஇஇ மெயின்: மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
நீச்சல் குளம்… கலர்ஃபுல் பிகினி… காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ
அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!
பாஜகவுக்கு வீழ்ச்சி… ஆம் ஆத்மிக்கு எழுச்சி! டெல்லி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?