அதிமுக பொன்விழா தொடக்க நாளில், எம்.ஜி.ஆரின் ராமாபுரம் இல்லத்தில் மரியாதை செலுத்தி தனது இரண்டாவது அரசியல் இன்னிங்ஸை தொடங்கிய சசிகலா, அக்டோபர் 28, 29 தேதிகளில் திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் அதிமுக கட்சியினருடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு தனது ஆதரவாளர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சசிகலா, பசும்பொன்னில் ஆண்டு தோறும் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, அதிமுகவில் கருத்து வேறுபாடு கொண்ட தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
சசிகலாவை கிண்டல் செய்யும் விதமாக அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்ததையடுத்து, சசிகலா மீண்டும் தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். சசிகலா தனது ஆதரவாளர்களிடம் அதிமுக ஆதரவாளர்களுக்கு பதிலடி கொடுத்து பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், சசிகலாவின் ஆதரவாளர்கள் கடந்த காலத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைவர்களை அணுகி வருகின்றனர்.
இதனிடையே, முன்னாள் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் கே.சி. பழனிசாமி மற்றும் புகழேந்தி ஆகியோர் சசிகலாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். கே.சி.பழனிசாமி மற்றும் புகழேந்தி இருவரும் அதிமுக ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போதுதான், எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்க்கட்சியான அதிமுக வலிமையுடன் எதிர்கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.
சசிகலாவை மீண்டும் அதிமுகவுக்குள் சேர்ப்பதில் தவறில்லை. ஜானகி மற்றும் ஜெயலலிதாவின் இணைவை நான் பார்த்திருக்கிறேன், ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறேன். இப்போது அதிமுகவின் நலனுக்காக, சசிகலா மற்றும் இபிஎஸ் அணிகள்இணைய விரும்புகிறேன் என்று அதிமுகவின் முன்னாள் எம்.பி பழனிசாமி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். அதிமுக தலைவர்களின் தற்போதைய வலிமை திமுகவை கடுமையாக பாதிக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கும் கட்சி தயாராக இருக்க அனைவரும் ஒன்றிணைந்த அதிமுகவின் தேவையாக உள்ளது.
மேலும், ஓபிஎஸ் அமைதியாக இருக்கிறார். சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், இபிஎஸ் மற்றும் ஜெயக்குமார் சசிகலாவுக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். ஒன்றிணைந்த அதிமுகவால் மட்டுமே கட்சிக்கு அடுத்தடுத்து வரும் தோல்விகளைத் தவிர்க்க முடியும் என்று புகழேந்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளர்.
சசிகலா, அதிமுகவை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த அதிமுக பொன்விழா தொடக்க நாளுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களை சந்தித்து ஆதரவைத் திரட்ட சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார். முதல் கட்டமாக ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தற்போதைய அதிமுக தலைமையின் மீது அதிருப்தி கொண்டுள்ள அதிமுக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்கு சசிகலா தனது ஆதரவாளர்களிடம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"