ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு ஆட்சியமைக்க வேண்டும் – சசிகலா

Sasikala Press Meet Jayalalitha Birthday 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என ஜெயலலிதா சொல்லிவிட்டுச் சென்றார்.

Sasikala Press Meet Jayalalitha Birthday Sasikala Speech Radhika Sarathkumar Tamil News
Sasikala Press Meet Jayalalitha Birthday

Sasikala Press Meet Tamil News : ஜெயலலிதா 73-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி சசிகலா மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு, மீண்டும் ஆட்சியமைக்கப் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், பொது எதிரியான திமுகவை தோற்கடிக்க உறுதியேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய சசிகலா, “நான் கொரோனாவில் இருந்தபோது கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்தேன். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என ஜெயலலிதா சொல்லிவிட்டுச் சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார் மற்றும் ராதிகா, சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்ததாக தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவை சந்திக்கும் போது சசிகலா உடனிருந்தார் என்றுகூறி ஜெயலலிதாவின் நினைவலைகளை சரத்குமார் பகிர்ந்துகொண்டார். உடன்பிறவா சகோதரியை பார்த்து உடல் நலம் விசாரித்தோம் என ராதிகா செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sasikala press meet jayalalitha birthday sasikala speech radhika sarathkumar tamil news

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com