/tamil-ie/media/media_files/uploads/2022/09/Ravanan.jpg)
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டவரும், மருத்துவர் அரவிந்த் தந்தையுமான ஆர்.பி. இராவணன் திருச்சியில் மருத்துவ உயர்கல்வி பயின்று வரும் தனது மகனுடன் தங்கி இருந்து உதவி புரிந்து வந்த நிலையில் திடீரென இன்று (செப்டம்பர் 21) மாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய இறுதி சடங்குகள் நாளை (செப்டம்பர் 22) அவருடைய சொந்த கிராமமான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள இராதாநரசிம்மபுரம் கிராமத்தில் நடைபெற உள்ளது. மேலும், இது குறித்த தகவல் வருமாறு :
கொங்கு மண்டல அ.தி.மு.க முக்கிய நிர்வாகியாக இருந்தவரும், சசிகலா, ஜெயலலிதா ஆகியோருக்கு ஆலோசனைகளைக் கூறியவராகக் கருதப்பட்ட கோவை ராவணன் இன்று மாலை திருச்சியில் காலமானார்.
சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரனின் மருமகன் ராவணன். கோவையில் தொழில் நிறுவனம் நடத்தி வந்த ராவணன், அ.தி.மு.க-வில் சசிகலா முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக்கு வந்தபோது அவருக்கு ஆலோசனைகளை வழங்கியவர் ராவணன்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.பிச்சைக்கண்ணு வாண்டையார் மகனான ராவணனுக்கு ஒரே மகன் அரவிந்த். இவர் திருச்சியில் மருத்துவ உயர்கல்வி பயின்று வருகிறார். அவருடன் தங்கி இருந்து வந்த நிலையில் திடீரென இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு ராவணன் உயிரிழந்தார். அவருடைய இறுதி சடங்குகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான இராதாநரசிம்மபுரம் கிராமத்தில் நாளை நடைபெற உள்ளது. அவரது மறைவுக்கு அதிமுக, அமமுக, விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் உள்ளிட்ட சிலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.