Advertisment

முதலில் விடுதலையாகும் சுதாகரன்... சசிகலா ரிலீஸ் தேதி, நேரமும் அறிவிப்பு!

சுதாகரன் சுமார் 4 மாதம் காலம் சிறையிலிருந்ததைக் கழித்தால் இந்த மாதத்திலும் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது.

author-image
WebDesk
New Update
sasikala release date sudhakaran

sasikala release date sudhakaran

sasikala release date sudhakaran : சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கூடிய விரைவில் விடுதலையாகுகின்றனர்.

Advertisment

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேர் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை செலுத்தினால் அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை கடந்த மாதம் சசிகலா வழக்கறிஞர் முத்துகுமார் நீதிமன்றத்தில் காசோலை வாயிலாக வழங்கினார். இதனையடுத்து அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிவடைகிறது.

ஜனவரி 27ம் தேதி இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா. அவரை தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை சசிகலாவுக்குப் பாதுகாப்பு வழங்கக் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இளவரசிக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான டிடியை வக்கீல்கள் அசோகன், பி.முத்துகுமார் ஆகியோர் செலுத்தினர்.சசிகலா ஏற்கனவே இதே வழக்கு தொடர்பாக 48 நாட்கள் சிறையில் இருந்ததை கழிக்க வேண்டும், அவர் சிறையில் இருந்தபோது கன்னட மொழி கற்றுக் கொண்டுள்ளார். இதை நன்னடத்தையாகக் கருதி தண்டனை காலம் முடிவதற்கு முன் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில சிறைத் துறை டிஜிபி மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடந்த மாதம் 19ம் தேதி வக்கீல்கள் அசோகன், பி.முத்துக்குமார் ஆகியோர் மனு கொடுத்தனர்.அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சசிகலா வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி இரவு 9.30 விக்கி விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே வேளையில் இளவரசி 5 நாள் பரோலில் வந்ததைக் கழித்தால் பொங்கலுக்கு முன்பு விடுதலை ஆவதற்கான‌ வாய்ப்புகளும், சுதாகரன் சுமார் 4 மாதம் காலம் சிறையிலிருந்ததைக் கழித்தால் இந்த மாதத்திலும் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் சொத்து வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி, சுதாகரன் மனு அளித்து இருந்தார். இந்நிலையில் நீதிமன்றம் சுதாகரனை முன்கூட்டியே விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment