Advertisment

ஜன. 27-ல் ரிலீஸ் ஆகும் சசிகலா தமிழகம் திரும்புவது எப்போது? டிடிவி தினகரன் விளக்கம்

sasikala release jail from jan 21 says ttv dinakaran :

author-image
WebDesk
New Update
News Highlights: சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு; தீவிர சிகிச்சை

சசிகலா நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்தார் .

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று பதிவிட்டார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிடி ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, சசிகலா உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

சசிகலா உடல்நிலை குறித்து வெளியிட்ட அறிக்கையில், " சசிகலாவிடம் கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் வெகுவாக குறைந்து விட்டன.  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், மருந்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்" என்று தெரிவித்தது.

நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், " சசிகலாவின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பல்ஸ், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட முக்கியமான உடல் நல அம்சங்கள் சீராக உள்ளது. ஆள் துணையுடன் எழுந்து நடக்கிறார். உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டார். கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக மாநில உள்துறை அமைச்சகம் சசிகலாவை சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை இன்று பிறப்பித்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

நாளை மறுநாள் சசிகலாவின் தண்டனை காலம் முடிவு பெற்றாலும்,  மருத்துவ சிகிச்சை காரணமாக  சென்னை  வருவது மேலும் தமாதமாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

சசிகலா விடுதலையாகும் நாளான  27ம் தேதியன்று  ஜெயலலிதா நினைவகத் திறப்பை நடத்த அதிமுக முடிவு செய்தது.  இவ்விழாவுக்கும் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினரைத் திரட்ட இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்திருக்கிறது. சசிகலாவை பெங்களூரு சிறை வளாகம் முதல் ஜெயலலிதா சமாதி வரை கார்கள் அணிவகுக்க, பிரமாண்டமாக வரவேற்க அமமுக-வினர் ஏற்பாடுகளை செய்து வந்திருந்தனர். இந்நிலையில், 27ம் தேதி சசிகலா சென்னை திரும்புவாரா? என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 
Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment