Sasikala Release : சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜெ., தோழி சசிகலா, அதிகாரபூர்வமாக இன்று(ஜன.,27) விடுதலையாகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்துவருகிறார். இவர் தமிழக அரசியலில் பேசுபொருளாக இருப்பதால், அவரது விடுதலை குறித்து அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வந்தது.இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி, சசிகலாவின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது.
சசிகலா விடுதலையை கோலாகலமாக கொண்டாடி உற்சாக வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். ஆனால் 20ஆம் தேதி அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு பௌரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அங்கு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா சிகிச்சை பெறும் வார்டுக்கு, இன்று காலை சென்று, விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெறவுள்ளனர்.
இவருடன் சிறைத்தண்டனை அனுபவித்த , இளவரசி, பிப்., 5ல் விடுதலையாவார் எனக் கூறப்படுகிறது. சுதாகரன் தரப்பில், நேற்று மாலை வரை, அபராத தொகை செலுத்தவில்லை. இதனால், அவரது விடுதலை கேள்விக்குறியாக உள்ளது.
Live Blog
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இலங்கையின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பும்படியாக ஐக்கிய மனித உரிமை கவுன்சிலின் 46வது கூட்டத்தில் இந்தியா செயல்படவும், இலங்கையில் 13வது அரசியல் சட்டத்திருத்தத்தைச் செயல்படுத்த பிரதமர் அலுவலகம் தலையிடவும் வலியுறுத்தி பிரதமருக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது வரை, ஒன்பது மாநிலங்களில் (கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், உத்தராகண்ட், குஜராத், உத்தரப்பிரதேசம், பஞ்சாப்) உள்ள பண்ணை பறவைகளிலும்,12 மாநிலங்களில் (மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், தில்லி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்) காகம்/இடம்பெயர்ந்த/காட்டு பறவைகளிலும் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை நினைவுச் சின்னமாக நாளை திறக்க அனுமதி; ஆனால், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லம் நினைவில்லமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என,17.08.2017 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வரும் 31-ம் தேதி கூட்டியுள்ளார். மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாம் கட்ட அமர்வு பிப்ரவரி மாதம் 15-ம் தேதியுடன் முடிவடையும்.
இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் மாதம் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 8-ம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய திருநெல்வேலி மாவாட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா என்பவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது.
This is what happens when the PM runs a country in the sole interest of 3-4 crony capitalists. pic.twitter.com/w1la4Rw2NK
— Rahul Gandhi (@RahulGandhi) January 27, 2021
கொரோனா பொது முடக்க காலத்தில் இந்திய பெரு முதலாளிகள் தங்கள் வருமனாங்களை 35% அதிகரித்ததாக வந்த அறிக்கையை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி, 'பிரதமர் 3-4 பெரு முதலாளிகளின் நலனுக்காக நாட்டை நிர்வகித்தால் இதுதான் நடக்கும்' என்று தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
கொரோனா தொற்று இல்லாத நிலை 3 நாட்கள் தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி சசிகலா வீடு திரும்புவார் என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை புதிய தகவல். சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால், 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
அவருடன், சிறையில், ஒரே அறையில் தங்கியிருந்த இளவரசியும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இருவருக்கும், பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்றும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், சசிகலா முழுமையாக குணமடைந்த பிறகே, அவர் தமிழகம் புறப்படுவார் எனக் கூறப்படுகிறது. விக்டோரியா மருத்துவமனை அல்லது பெங்களூரில் வேறு தனியார் மருத்துவமனையில், சசிகலா தனது சிகிச்சையை தொடர்வார் என்று கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights