தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க என்பது என்ன என்று எல்லோருக்கும் புரியும்.
3 அணியாக பிரிந்துள்ள அ.தி.மு.க ஒன்றாக இணைய வாய்ப்பு உள்ளது என்பது எனது அனுமானம். தமிழக அரசு தேர்தலை காரணம் காட்டி எவ்வித ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளது.
எப்படியாவது பொய்களை சொல்லி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில்தான் தற்போது தி.மு.க அரசு கவனம் செலுத்தி வருகிறது.
2026 தேர்தல் என்பது எங்களுக்கும் திமுகவுக்கும், நேரடி போட்டியாக இருக்கும். அந்த தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன்.
மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அதாவது இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டதோ அந்த ஆட்சி வரவேண்டும் என வாக்களிக்க வேண்டும்.
அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ளது பங்காளி சண்டை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேர்ந்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒரே அணியாக போட்டியிட்டு வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும்” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“