Advertisment

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை தவிர்ப்பது அழகல்ல: சசிகலா

தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பலை கொண்டாடுவதுதான். அதனை தவிர்ப்பது என்பது அது தமிழ்நாட்டுக்கு அழகல்ல” என்று தஞ்சாவூரில் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
Jan 25, 2023 23:28 IST
Sasikala, VK Sasikala, Governor Tea Party, Sasikala comment on Tea Party

தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பலை கொண்டாடுவதுதான். அதனை தவிர்ப்பது என்பது அது தமிழ்நாட்டுக்கு அழகல்ல” என தஞ்சாவூரில் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு:

Advertisment

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டையில் சசிகலாவின் தம்பி திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகலா இன்று மாலை தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாவது:

publive-image

“வீரவணக்கம் நாள் நிகழ்ச்சி இங்கு நடப்பது தமிழினம், நாடு என்பது இல்லாமல் தமிழரின் ஒற்றுமையைக் குறிக்கும். இங்கு உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

publive-image

வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி அமைப்பது குறித்து உங்களிடம் நிச்சயமாகச் சொல்வோம். ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் தமிழக அரசுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். என்ன மாதிரி ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தல் வரும் 27-ம் தேதி தான் நடைபெறவுள்ளது, அங்கு பிரச்சாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

publive-image

தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பலை கொண்டாடுவதுதான். அதனை தவிர்ப்பது என்பது அது தமிழ்நாட்டுக்கு அழகானதல்ல” எனத் தெரிவித்தார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Sasikala #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment