ஜெ. நினைவிட விசிட்… அப்புறம் தமிழக டூர்… அக். 16-ல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் சசிகலா!

சசிகலா அக்டோபர் 16ல் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்.

Sasikala to visit Jayalalitha memorial, Sasikala to visit Jayalalitha memorial on october 16th, commemorating 50 years of founding AIADMK,Sasikal, AIADMK, ஜெயலலிதா நினைவிட விசிட், சசிகலா தமிழக டூர், அக்டோபர் 16ல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் சசிகலா, Sasikala visit Jayalalitha memorial, tamil nadu politics

அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜெயலளிதாவின் நெருங்கிய தோழியும் இபிஎஸ் – ஒபிஎஸ் அணியால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவருமான சசிகலா, அக்டோபர் 16ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளதாக அறிவித்திருப்பது தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டு சலசலப்பு ஏற்படுத்தி வந்த நிலையில், அக்டோபர் 16ல் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக தெரிகிறது.

ஜெ மறைவுக்கு பிறகு கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற நினைத்த சசிகலா, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரானார். ஆனால், அவர் தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த சூழலில்தான், அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சசிகலா அக்டோபர் 16ம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தி மரியாதை செலுத்த உள்ளதாக அறிவித்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருட சிறை தண்டனை முடிவடைந்த பிறகு சசிகலா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு முதல்முறையாக செல்கிறார்.

சசிகலா பெங்களூருவில் இருந்து திரும்பியவுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இருப்பினும், ஏப்ரல் 6 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சசிகலா நினைவிடத்திற்கு வருவதைத் தடுப்பதற்காக அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசால் ஜெயலலிதா நினைவிடம் அவசரமாக மூடப்பட்டதாக அரசியல் களத்தில் பேசப்பட்டது.

அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டு நிறைவடைகிறது. இதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்த அவரது தோழி சசிகலா, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார். எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகும் அதிமுகவை நிறுவினார். பின்னர், கருணாநிதி தலைமையிலான திமுகவை தோற்கடித்தார்.

சசிகலா விடுதலையான பிறகு, அதிமுக அவர் அதிகம் செல்வாக்கு செலுத்துவார், கட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவார், கட்சி தொண்டர்கள்வர் பின்னால் அணிவகுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த சூழலில்தான், சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளதாக அறிவித்திருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 4 நாட்களுக்குப் பிறகு, சசிகலாவின் இந்த வருகை அமைகிறது – அதிமுக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை ஈட்டி நேர் செய்யும் என்று அதிமுக தலைமை நம்புகிறது. ஆனால், ஆனால் அரசியல் நோக்கர்கள் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள்.

சசிகலா, அக்டோபர் 16ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதற்கு முன்னதாக, “அம்மாவின் (ஜெயலலிதாவின்) ஆட்சி அமைக்க கடுமையாக உழைக்க ஒன்று சேர வேண்டும்” என்று சசிகலா அதிமுகவினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அம்மா அல்லது எம்ஜிஆரை மிகவும் நேசிக்கும் ஒருவர் கட்சியை விட்டு வெளியேற மாட்டார். கட்சித் தொண்டர்களின் வேதனையை நான் பார்த்து வருகிறேன். இதைப் பார்த்து யாரும் அமைதியாக இருக்க முடியாது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு என்ன நடந்ததோ, அதே போல, நான் மீண்டும் கட்சிக்கு வந்து அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாம் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். இது எனது விருப்பமும் ஆசையும் ஆகும்” என்று சசிகலா கூறினார்.

சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த பிறகு, அதிமுக தொண்டர்களுடன் போன் மூலம் பேசிய ஆடியோவை வெளியிட்டு சலசலப்பு ஏற்படுத்தி வந்தார். ஆனால், அந்த ஆடியோக்கள் அதிமுகவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில்தான், சசிகலா அக்டோபர் 16ல் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sasikala to visit jayalalitha memorial on october 16th commemorating 50 years of founding aiadmk

Next Story
மின்வெட்டை தவிர்க்குமா தமிழகம்? 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்புTangedco has enough coal only for 4 days, will tamil nadu skip power cut, நிலக்கரி பற்றாக்குறை, தமிழ்நாடு மின்சார வாரியம், டான்ஜெட்கோ, அனல் மின் நிலையம், நிலக்கரி இருப்பு, Tangedco, Tamilnadu Electricity Board, Tangedco, NLC tamilnadu, PLC, coal, coal crisis
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com