Advertisment

சசிகலா ரிலீஸ்.... தேதியை உறுதி செய்த சிறை நிர்வாகம்!

12 நாட்களும் பரோலில் சசிகலா வெளியே வந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasikala vk sasikala release date jail, sasikala political plan, சசிகலா அரசியல் திட்டம், sasikala letter to advocate raja senthoor pandian

சசிகலா

sasikala vk sasikala release date : சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் வி.கே. சசிகலா, தண்டனை அனுபவித்து வருகிறார்.

Advertisment

கடந்த மாதம், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “இன்னும் ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளது. காரணம் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும்.

எனவே சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும்” எனக் கூறினார்.

சசிகலா இந்த மாதம் விடுதலையாவார், அடுத்த மாதம் விடுதலையாவார் என அடுத்தடுத்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சசிகலாவின் விடுதலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்றும், அவரது அபராதத் தொகையை செலுத்தாத பட்சத்தில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி அவர் விடுதலை ஆகலாம் என்றும் தெரிவித்தது. ஆனாலும், அவர் அதற்கு முன்னரே விடுதலையாக வாய்ப்புள்ளது என்றும் அமமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

14.2.2021ம் தேதியோடு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை காலம் முடிவு பெறுகிறது. 6.10.2017 முதல் 12.10.2017 வரை 5 நாள்களும், 20.3.2018 முதல் 31.3.2018 வரை 12 நாள்களும் பரோலில் சசிகலா வெளியே வந்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment