வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 29 செயற்கைக்கோள்

ஜி.எஸ்.எல்.வி மார்க்3 டி2 விண்கலம் சுமந்து சென்ற ஜிசாட் 29 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி மார்க்-3டி2 ராக்கெட், இஸ்ரோவின் உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஜி.சாட்-29 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஜி.எஸ்.எல்.வி மார்க்-3டி2 உதவியுடன்…

By: November 15, 2018, 10:43:27 AM

ஜி.எஸ்.எல்.வி மார்க்3 டி2 விண்கலம் சுமந்து சென்ற ஜிசாட் 29 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி மார்க்-3டி2 ராக்கெட், இஸ்ரோவின் உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஜி.சாட்-29 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஜி.எஸ்.எல்.வி மார்க்-3டி2 உதவியுடன் ஜிசாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது

ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ஏவுகணை நேற்று மாலை 5.08 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட இந்த ஏவுகணை ஜி.சாட் 29 செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சென்று விண்ணில் நிலைநிறுத்தியது.

பூமியிலிருந்து சுமார் 36,000 மைல் தொலைவில் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இந்த ஜி-சாட் 29 என்ற செயற்கைகோளின் மூலம் காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநில மலைப்பகுதிகளின் தொலைத்தொடர்பு சேவை மேம்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுமார் ரூ.400 கோடி செலவில் 3ஆயிரத்து 423 கிலோ எடையுடன் தயாரிக்கப்பட்ட ஜி.சாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் என இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து இந்த ஆண்டு ஏவப்பட்ட 5வது ராக்கெட் இந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3டி2 என்பதும், தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 39வது செயற்கைக்கோள் இந்த ஜிசாட்-29 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Satellite gsat 29 launched by isros gslv mkiii d2 rocket

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X