சாத்தான்குளம் வழக்கை முடக்கிய கொரோனா: இதுவரை 5 சிபிஐ அதிகாரிகளுக்கு தொற்று

Sathankulam case : சிபிஐ விசாரணை வேகமெடுத்த நிலையில் 5 அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

By: Updated: July 27, 2020, 11:43:41 AM

சாத்தான்குளம் வழக்கில் போலீசார்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 10 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், விசாரணையில் தொய்வு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், ஜூன் 19ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், 60; மகன் பெனிக்ஸ், 31 ஆகியோர், போலீஸ் தாக்குதலில் இறந்தனர். இது தொடர்பாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸ்காரர்கள் என, 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ கூடுதல் டிஎஸ்பி சுக்லா தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினர். பின்னர் இவ்வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருக்கும் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேரில் 8 பேரை அடுத்தடுத்து காவலில் எடுத்து விசாரித்தனர்.

கொரோனா பரிசோதனை

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள், கைதிகள் 10 பேர், மதுரை சிபிஐ அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஜூலை 22ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சச்சின், சைலேஷ் குமார் மற்றும் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற மதுரை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கும் கொரோனா உறுதியானது. மேலும், பவன்குமார், அஜய்குமார் ஆகிய சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து மதுரை சிபிஐ அலுவலகத்தில் பணிபுரிந்த 40-க்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. மதுரை சிபிஐ அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாகவே குறைந்த நபர்களே பணிக்குச் செல்கின்றனர். இது போன்ற சூழலில் சாத்தான்குளம் வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

வழக்கில் கைதானோரைக் காவலில் எடுத்து விசாரணை, சாத்தான்குளம் காவல்நிலையம், கோவில்பட்டி சிறை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என சிபிஐ விசாரணை வேகமெடுத்த நிலையில் 5 அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Sathankulam custodial death cbi enquiry corona infection cbi officers case trial postpone

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X