sathankulam father son death, cbi investigation in sathankulam, பொலீஸ் சித்திரவதை, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம், சாத்தான்குளம், சிபிஐ விசாரணை, cbi investigation at sathankulam hospital and jayaraj bennix house, jeyaraj bennix murder, police torture
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ அதிகாரிகள் இன்று ஜெயராஜ் வீடு மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பென்னிக்சின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சம்பவத்தன்று நடந்த காட்சிகளை சொல்லவைத்து வீடியோ பதிவு செய்தனர்.
Advertisment
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த மாதம் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து நடந்த போராட்டம், உலக அளவில் கவனத்தைப் ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்ததில் 10 போலீசார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சாத்தான்குளம் வழக்கு சிபிஐ விசாணைக்கு மாற்றப்பட்டது. நேற்று சிறப்பு விமான மூலம் டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள் இன்று சாத்தான்குளம் சென்று ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் அவர்களை மருத்துவ சான்றிதழுக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், சிபிஐ அதிகாரிகள் பென்னிக்ஸின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சம்பவத்தன்று நடைந்த காட்சிகளை சொல்ல வைத்து வீடியோ பதிவு செய்தனர்.
Advertisment
Advertisements
சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் சிபிஐ அதிகாரிகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு, மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை சூடுபிடித்திருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"