சாத்தான்குளத்தில் தந்தை மகன் நீதிமன்றக் காவலில் இறந்தது தொடர்பாக, சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் பி.சரவணனை, நீதித்துறையின் முறையற்ற செயலுக்காகவும் கைது செய்யப்படும்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறியற்காகவும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இந்த வார தொடக்கத்தில், தந்தை மகன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்தனர். அவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு பொது மக்களின் போராட்டம் வெடித்தது.
சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் பி.சரவணனை, நீதித்துறையின் முறையற்ற செயலுக்காகவும் கைது செய்யப்படும்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறியற்காகவும் இந்த வழக்கில் அவருடைய தவறான நடத்தை தெளிவாக உள்ளதால் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தியுள்ளார்.
முதலில் போலீசார் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்று கூறிய நீதிபதி சந்துரு, மாஜிஸ்திரேட், கைது செய்யப்படும்போது பின்பற்றவேண்டிய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் நீதித்துறையின் நடைமுறையை கைவிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது எந்தவிதமான புகாரும் தெரிவிக்கவில்லை என்று சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் இதிலிருந்து பொருப்பை தட்டிக்கழித்துவிட முடியாது என்று நீதிபதி சந்துரு கூறினார்.
“அவர்கள் கடுமையாக காயமடைந்து இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால், அந்த காயங்களை மாஜிஸ்திரேட் விசாரித்திருக்க வேண்டும். தந்தையும் மகனும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டாலும் மாஜிஸ்திரேட் காவல்துறையிடம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அது மாஜிஸ்திரேட்டின் வேலை. நாட்டின் சட்டத்தையும் அரசியலமைப்பையும் கைவிட்ட சாத்தான்குளம் நீதித்துறை மாஜிஸ்திரேட் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என்று நீதிபதி சந்துரு வலியுறுத்தினார்.
“டிகே பாஸு Vsபெங்கால் மாநில வழக்கில் 11 உத்தரவுகளை இந்தியா முழுவதும் வழிகாட்டியாக பின்பற்ற உச்ச நிதிமன்றம் கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது என்று நீதிபதி சந்துரு கூறினார். “காவலில் உள்ள எந்தவொரு குற்றவாளியும் அவர் காவலில் சித்திரவதை செய்யப்பட்டார் என்று மாஜிஸ்திரேட்டிடம் சொல்ல தைரியம் இருக்காது. குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சோதிப்பது மாஜிஸ்திரேட்டின் வேலை. அவர்கள் ஏன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள், ஏன் காயங்கள் அல்லது இரத்தப்போக்கு ஏற்பட்டன, ரிமாண்ட் செய்யப்படுவதற்கு முன்பு காவல்துறையினர் அவரகளுடைய உறவினர்களிடம் தெரிவித்தார்களா? அவர்களுக்கு ஒரு வழக்கறிஞர் இருக்கிறாரா? என்று அவர் அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை மாஜிஸ்திரேட் உறுதி செய்திருக்க வேண்டும்” என்று நீதிபதி சந்துரு கூறினார்.
போலீஸ் சித்திரவதை என்பது ஒரு புதிய அதிகாரக் கட்டமைப்பின் விளைவாக பொது முடக்கத்திற்குப் பிறகு வடிவம் பெற்றுள்ளது என்று நீதிபதி சந்துரு கூறினார்.
“முழு அதிகாரமும் இப்போது காவல்துறை மற்றும் அதிகார மையங்களின் கைகளில் உள்ளது. தற்போதைய நிலைமை என்னவென்றால் எதிர்க்கட்சித் தலைவர்கூட தனது வீட்டு வாசலில்மட்டும்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியும். இருப்பினும், நாடார் போன்ற ஒரு சக்திவாய்ந்த வர்த்தக சமூகத்தின் ஆதரவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்புக்களைத் தூண்டியது. ஆனால், இதே போன்ற மீறல்கள் நடந்து கொண்டிருக்கலாம்... நீதிமன்றம் கூட இங்கு உதவவில்லை” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"