ஜெயராஜ், பென்னிக்ஸ் ரத்தம் தோய்ந்த ஆடைகள்: ‘ஐ விட்னஸ்’ தரும் அதிர்ச்சி தகவல்கள்

justice for jeyaraj and fenix: இருப்பினும், காவல் நிலையம் பூட்டிய நிலையில் இருந்தது. அதிகாலை 1.30 மணி வரை காத்திருந்தோம். எந்த முன்னேற்றமும்...

Arun Janardhan

தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்  இருவரும் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில்  அடுத்தடுத்து மரணடைந்தனர். இருவரையும் சந்தித்து பேச இரண்டு நாட்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸின் ஆடைகள்  இரத்தத்தால் நனைக்கப்பட்டிருந்த கோரக் காட்சியையும்  விவரிக்கின்றனர்.

புதன்கிழமை, தமிழ்நாடு வணிகர் சங்கம் காவல்துறையின் துஷ்பிரயோகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தியது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், மாலை 7 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் 19ம் தேதியன்று இந்த காலக்கெடுவைத் தாண்டி சாத்தான்குளத்தில் தனது மொபைல் போன் கடையைத் திறந்து வைத்திருப்பது தொடர்பாக நாடார் சமூகத்தை சேர்ந்த ஜெயராஜ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, காவல்துறை ஜெயராஜை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தகவலை அறிந்த தனது நண்பருடன் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்ற பென்னிக்சையும் காவல்துறை கைது செய்தது.பின்பு, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்  இருவரும் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, இருவரும் உயிர் இழந்தாதாக அறிவிக்கப்பட்டது.

பென்னிக்ஸின் மூத்த சகோதரியின் கணவர் வினோத் குமார் இது குறித்து கூறுகையில், பென்னிக்ஸ் காவல் நிலையத்திற்கு செல்லும் வழியில், எனது துணைவியாரை தொலைபேசியில் அழைத்தார். தொலைபேசி அழைப்பை எதிர்பாராத விதமாக எங்களால் எடுக்க முடியவில்லை. எனவே, பென்னிக்ஸ் தனது மற்றொரு சகோதரியை தொடர்பு கொண்டு தான் காவல் நிலையம் செல்லும் விசயத்தை தெரியபடுத்தினார்,” என்று தெரிவித்தார்.

ஜெயராஜின் தங்கை கணவர் எஸ். ஜோசப் இதுகுறித்து கூறுகையில், ” பென்னிக்ஸிடமிருந்து எந்த தகவலும் வராதாதால்,  நாங்கள் காவல் நிலையத்திற்கு விரைந்தோம். இருப்பினும், காவல் நிலையம் பூட்டிய நிலையில் இருந்தது. அதிகாலை 1.30 மணி வரை காத்திருந்தோம். எந்த முன்னேற்றமும் இல்லை. மறுநாள் காலை அடுத்த கட்ட நடவடிகையை மேற்கொள்ளலாம் என்ற முடிவோடு அங்கிருந்து கிளம்பினோம்” என்று தெரிவித்தார்.

ஜூன் 20 அதிகாலை, நாங்கள் காவல் நிலையத்திற்கு மீண்டும் விரைந்தோம். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாதான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்யுமாறு காவல்துறை எங்களிடம் தெரிவித்தது. மேலும், அவர்களுக்கு ஒரு புதிய ஜோடி ஆடைகளையும் ஏற்பாடு செய்யுமாறு காவல்துறை தெரிவித்தது. வாகனத்தை ஏற்பாடு செய்தபின், நானும், எனது மனைவியும் அரசு மருத்துவமனை வரை வாகனத்தை பின்தொடர்ந்தோம். தூரத்திலிருந்து நாங்கள் பார்த்தோம். ஜெயராஜ், பென்னிக்ஸ் மோசமாக காயமடைந்திருந்தனர். அவர்களின் ஆடைகளை இரத்தத்தால் நனைக்கப்பட்டிருந்தது” என்று எஸ். ஜோசப் மேலும் கூறினார்.

மருத்துவமனை வாயிலில் அவர்கள் இருவரையும் காவல்துறை சூழ்ந்திருந்தனர். என் மனைவி தான் ஜெயராஜின் சகோதரி என்றும் அவர்களிடம் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்று கெஞ்சினார். ஜெயராஜால் பேச முடியவில்லை. குறிப்பாக இடுப்புக்கு கீழே, தனது ஆடைகளில் ரத்தம் கசிந்திருப்பதை ஜெயராஜ் சைகையால் சுட்டிக்காட்டினார். பென்னிக்ஸின் பின்புறம் இரத்தத்தில் நனைந்திருந்தது. காவல்துறையினர் தங்கள் இருவரையும் இரவு முழுவதும் தாக்கியதை ஜெயராஜ் தங்களுக்கு புரிய வைத்தார், ”என்று ஜோசப் கூறினார்.

பென்னிக்ஸ் உடையில் ரத்தம் கசிந்திருந்ததால் வேஷ்டியைக் மாற்ற காவல்துறையினர் அனுமதித்தனர். அப்போதும், கூட ரத்தம் அவர் உடம்பில் இருந்து வெளியேறியது. மற்றொரு  வேஷ்டியைக் கொண்டு வரும்படி காவல்துறை எங்களிடம் கேட்டது. ஆனால், பென்னிக்சை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்வதற்கு முன்பே அந்த வேஷ்டியும் ரத்தத்தால் நனைந்தது. பென்னிக்ஸ் கழற்றிய ஆடைகளை என் மனைவி எடுக்க போலீசார் அனுமதிக்கவில்லை. ” என்று ஜோசப் தெரிவித்தார்.

மருத்துவமனையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் நடந்த மருத்துவ பரிசோதனை ஒரு “கண் துடைப்பு ” என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,” அவர்கள்  இருவரின் உடல்நிலையை சீராக்கவும், இரத்தப்போக்கை குறைக்கவும்  இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு கொஞ்சம் மருந்து வழங்கப்பட்டது. இரத்தம் வெளியேறிக் கொண்டே இருந்ததால்,  உடைகள் அடிக்கடி மாற்றப்பட்டது. காலை 11.30-11.45 மணியளவில், நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, அவர்கள் மாஜிஸ்திரேட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், ”என்று அந்த அதிகாரி கூறினார்.

நீதிமன்றத்தில் கூட,  இருவராலும் சுதந்திரமாக பேச முடியவில்லை. அவர்களை காவல்துறை அதிகாரிகள் சூழ்ந்திருந்தனர் என்று ஜெயராஜின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். நீதிபதி, அவர்களை கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்க உத்தரவிட்டார்.

ஜூன் 21 அன்று மாலையில், பென்னிக்ஸின் இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக உள்ளது என்று எங்களுக்கு தொலைபேசி  அழைப்பு வந்தது. பின்னர், குடும்பத்தினர் உடனடியாக சிறை மருத்துவமனைக்கு வருமாறு மற்றொரு தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது . பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவு இறந்தார், சில மணி நேரத்தில் அவரது தந்தை ஜெயராஜ் மரணமடைந்தார்.

உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், ஜூன் 19-20 இரவு முழுவதும் அவர்கள் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களின் ஆசன வாயில்  லத்திகள் சொருகப்பட்டுள்ளது.  பென்னிக்ஸ் தனது தந்தையை விட அதிக இரத்தப்போக்கு கொண்டிருந்தார்” என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close