Advertisment

மு.க.ஸ்டாலின் முயற்சியில் இணைந்த ரஜினிகாந்துக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்

குடும்பத்துக்கு நீதிகிடைக்க  தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு. க ஸ்டாலின்  அவர்களின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார்  அவர்களுக்கு நன்றி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மு.க.ஸ்டாலின் முயற்சியில் இணைந்த ரஜினிகாந்துக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஜெயராஜ்- பென்னிக்ஸ் இருவருக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க  தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு. க ஸ்டாலின்  அவர்களின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார்  அவர்களுக்கு நன்றி என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்தார்.

Advertisment

ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோரது உடலில் மோசமான காயங்கள் இருப்பது தெரிய வந்ததையடுத்து, சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்  இருவருக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் பகிரங்கமாக கருத்து தெரிவித்தது.

இதற்கிடையே, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய நீதிவிசாரணை அதிகாரி பாரதிதாசன்  சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு சமர்ப்பித்த அறிக்கையில்," ஜூலை 28-ம் தேதி நீதிமன்ற ஊழியர்களுடன் 12.45 மணி அளவில் காவல் நிலையம் சென்றேன். காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.குமார், எஸ்.பி.பிரதாபன் இருவரும் ஆய்வாளர் அறையில் இருக்கின்ற நிலையில் உள்ளே நுழைந்தேன். அவர்கள் இருவரும் எவ்வித வரவேற்பு அறிகுறியும் இல்லாமல் ஒருமுறைகூட முறையாக வணக்கம் செலுத்தாமல் அலட்சிய மனப்பான்மையுடனும் பொறுப்பற்ற தன்மையுடனும் நடந்துகொண்டனர் . கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.குமார் உடல்பலத்தைக் காட்டுவதான அசைவுகளை செய்துகொண்டு ஒரு மிரட்டும் தொனியிலான பார்வையுடனும் உடல் அசைவுகளுடனும் இருந்தார். காவலர் மகாராஜன் என்பவர் என்னைப் பார்த்து உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா என்று என் முதுகிற்குப் பின்னால் என் காதில் விழும்படி பேசி அங்கே ஒரு அசாதாரண சுழ்நிலையை உருவாக்கினார்" என்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன் குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் ட்வீட்:  

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழப்பு சம்பவம்  கடந்த ஜூன் 22ம் தேதியன்று நடைபெற்றது. இதனையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

அதன் தொடர்ச்சியாக, நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ட்விட்டரில், " தந்தையையும், மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை, மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது. #சத்தியமா_விடவே _கூடாது என்ற ஹேஸ்டேக் அறிமுகப்படுத்தினார். இந்த ஹேஸ்டேக்  தற்போது ட்விட்டரில்  பிரபலமாகி  வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் பதில்: 

சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழப்பு விவகாரத்தில், ஆரம்பத்தில் இருந்தே திமுக அதிகளவிலான அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இந்த விவகாரத்தை முதலில் அதிதீவிரமாக கையில் எடுத்தவர்  திமுக எம்.பி  கனிமொழி என்றே கூறலாம். திமுக சார்பில் பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.  திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாத்தன்குளத்திற்கு நேரடியாக சென்று குடும்பத்திற்கு ஆறுதல் அளித்தார்.

 

எனவே, உயிரிழப்பு சம்பவம் நடந்து வெகுநாட்கள் கழித்து கண்டன அறவிப்பு வெளியாகியுள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக, "மு. க ஸ்டாலின்  அவர்களின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார்  அவர்களுக்கு நன்றி" என்று ரஜினிகாந்துக்கு உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rajini Kanth Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment